சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் 2006ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தனுஷுடன் ஜோடியாக நடிக்கவிருந்த ஜோதிகா, கடைசி நேரத்தில் சூர்யாவால் அந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
ஜோதிகாவுக்கு சூர்யாவால் மிஸ்ஸான தனுஷ் பட வாய்ப்பு:கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் இருந்து விலகினார். சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் 2006ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் சூர்யாவின் கேரியர் உச்சம் தொட்டாலும் ஜோதிகா பட தயாரிப்பு பணிகளை மட்டுமே கவனித்து வந்தார்.
அதன்பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்குப் பின்னர் ஜோதிகா நடிக்க வந்ததால் அவரது ரசிகர்களும் உற்சாகமானார்கள். இதனையடுத்து மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, தம்பி, உடன்பிறப்பே என அடுத்தடுத்து நடிப்பில் பிஸியாகிவிட்டார்.
தற்போது மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் காதல் படத்திலும் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருமணத்திற்கு நாள் குறித்ததும் ஜோதிகா அப்போது கமிட்டாகியிருந்த சில படங்களில் இருந்து விலகினார். ஏற்கனவே சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு சிவகுமார் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததாக சொல்லப்பட்டது. அதன்பிறகு இயக்குநர் பாலா உள்ளிட்ட சிலர் தான் சிவகுமாரிடம் பேசி முடித்தனர்.
அதன் காரணமாக திருமணத்தின் போது ஜோதிகா பல படங்களில் கமிட் ஆகியிருந்தாலும் அவைகளில் இருந்து விலகினார். அதில் ஒன்று தான் யாரடி நீ மோகினி திரைப்படம். தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் 2008ம் ஆண்டு வெளியானது. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்திற்கு தனுஷுடன் ஜோடியாக நடிப்பதற்கு ஜோதிகாவை தன் படக்குழு முதலில் அணுகியதாம். அவரும் கால்ஷீட் கொடுத்து நடிக்க ரெடியாக காத்திருந்தாராம். ஆனால், தனுஷுடன் நடிக்க வேண்டாம் என சூர்யா ஆர்டர் போட்டதாகவும், அதனால் யாரடி நீ மோகினி படத்தில் இருந்து ஜோதிகா விலகியதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் எதற்காக தனுஷுடன் நடிக்கக் கூடாது என சூர்யா சொன்னார் என தெரியவில்லையாம்.
அதன்பின்னரே ஜோதிகாவுக்குப் பதிலாக நயன்தாராவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. யாரடி நீ மோகினி படத்தில் நடித்து முடித்த பின்னர் தனுஷ் - நயன் இடையேயான நட்பிலும் விரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடன் நடிக்க முடியாமல் போன ஜோதிகா, அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லையாம்.