ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் படிக்க கிளம்பிய அமுதாவை அன்னம் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, செந்தில் அன்னமிடம் எதுக்கும்மா அமுதாவை வீட்டை விட்டு போகச் சொன்ன என கேக்க, அன்னம் நான் போகட்டுமா என்று பதில் சொல்லி விட்டு நகர்கிறாள். இதையடுத்து அமுதா சிதம்பரத்திடம் என்ன இருந்தாலும் நீங்க அத்தையை பார்த்து கை ஓங்குனது தப்புப்பா என சொல்கிறாள்.
இந்த நேரம் பார்த்து இங்கு வரும் அன்னம் பஞ்சாயத்தை கூட்டிட்டேன்.. இனிமே அமுதா வீட்டுக்குள்ள வரனும்னா அவ படிக்கிற ஆசையை தூக்கி போட்டுட்டு தான் வரனும் என்று சொல்கிறாள். செந்திலிடம் இந்த விஷயத்துல என் பேச்சை மீற மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணு என சொல்ல, செந்தில் யோசிக்க, பெத்தவளை நீயும் மதிக்கலை, அவங்களும் மதிக்கலை நான் எதுக்கு உயிரோட இருக்கனும் என கோபமாக சொல்ல, செந்தில் நான் உன் பேச்சை மீற மாட்டேன் என சத்தியம் செய்கிறான்.
மறுபக்கம் செல்வாவுக்கு போன் செய்யும் அன்னலட்சுமி பஞ்சாயத்து கூட்டி இருப்பதாக சொல்கிறாள். பஞ்சாயத்தில் அன்னலட்சுமி அமுதா படிக்கனும்னா தாலியை கழட்டி சபைல குடுத்துட்டு போக சொல்லுங்க என சொல்ல செல்வா பஞ்சாயத்தாரிடம் கல்யாணம் பண்ணிட்டு படிச்சா தெய்வ குத்தமா என்ன கேட்கிறான். செந்திலை பேச சொல்ல அவன் அமைதியாக நிற்கிறான். பஞ்சாயத்தார் ரெண்டு பக்கமும் நியாயம் இருக்கு, இதுல நாங்க என்ன முடிவு சொல்றதுன்னு தெரியலை என்று முடிவாக அமுதாவிடம் உனக்கு படிப்பு முக்கியமா இல்ல உன் புருஷன் முக்கியமான்னு ஒரு நாளைக்குள்ள முடிவு பண்ணி சொல்லு என சொல்லி பஞ்சாயத்தார் கலைகின்றனர்.