இந்நிலையில் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருந்த பிரபலம் ஒருவர், பணத்தை ஏமாந்தது குறித்து தற்போது தெரியவந்துள்ளது. சிவகார்த்திகேயன் படத்தால் ஏமாந்துபோன பிரபலம்:
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து விஜய் டிவியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருந்த சிவாவை வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தியது இயக்குநர் பாண்டிராஜ். அவர் இயக்கிய மெரினா படத்தில் தான் சிவகார்த்திகேயன் தனது பயணத்தை தொடங்கினார்.
அதன்பின்னர் தனுஷுடன் '3', வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர் நீச்சல், மான் கராத்தே என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மாஸ் காட்டினார். இப்போது கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன், கமல் தயாரிப்பில் SK 21 என படு பிஸியாக வலம் வருகிறார்.
இந்நிலையில், விஜய் டிவியில் பிஸியாக இருந்தபோதே பல இயக்குநர்களிடம் வாய்ப்புத் தேடிச் சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அவர்களில் செம்புலி ஜெகன் என்பவரும் ஒருவர். கே பாக்யராஜின் உதவியாளர்களில் ஒருவரான செம்புலி ஜெகன், ராசுக்குட்டி படத்தில் புல்லட்டில் நின்று குடை பிடித்தபடி காமெடியில் கலக்கினார். இந்தப் படம் தவிர இன்னும் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார்.
இவர் காமெடி நடிகன் என்பதைவிடவும் சிறந்த ஸ்கிரிப்ட் ரைட்டர் என்றே பலரும் கூறுகின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலத்தில் அவருக்காக ஒரு கதை எழுதியுள்ளார் செம்புலி ஜெகன். அந்த கதை சிவகார்த்திகேயனுக்கும் பிடித்துவிட அவரும் ஓக்கே சொல்லிவிட்டாராம். அதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தும் பார்த்துள்ளனர்.
இறுதியாக படப்பிடிப்புக்கு நாள் குறித்துவிட்டு காத்திருக்க, இப்படத்திற்காக செம்புலி ஜெகன் வைத்திருந்த பெரிய தொகையை அவரது நண்பர் அபேஸ் செய்துவிட்டாராம். கிட்டத்தட்ட அந்த தொகை 30 முதல் 50 லட்சம் ரூபாய் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதனால் கடைசி நேரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் செம்புலி ஜெகன்.