நடிகை இலியானா முதன்முறையாக தனது காதலருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். ஆனால் அவரது கர்ப்பத்துக்கு யார் காரணம் என அறிவிக்கவில்லை. இது பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து இலியானாவின் காதலர் யார் என ஊடகங்கள் பல்வேறு யூகங்களை வெளியிட்டுவந்தன.
இந்த நிலையில் காதலருடன் இருக்கும் பிளாக் அண்ட் வொய்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனக்கு பிறக்கப்போகும் குழந்தை குறித்தும், காதலர் குறித்தும் நீண்டதொரு பதிவை எழுதியுள்ளார்.
அவரது பதிவில், கர்ப்பமாக இருப்பது ஒரு அழகிய ஆசிர்வாதம் போன்றது. நான் இவ்வளவு பாக்கியசாலி என நினைத்துப்பார்க்கவில்லை. இந்தப் பயணத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டம் மிக்கவள். எனக்குள் ஒரு உயிர் வளர்வதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. பெரும்பாலான நாட்கள் நான் மகிழ்ச்சியானவளாக இருக்கிறேன். நான் உன்னை விரைவில் சந்திக்கப்போகிறேன்.
இன்னும் சில நாட்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடினமானதாக இருக்கிறது. சில கண்ணீர், அதனைத் தொடர்ந்து வரும் குற்ற உணர்வு என நடப்பவை நம்பிக்கயற்றவையாக இருக்கிறது. என் தலைக்குள் ஒலிக்கும் குரல் என்னை அமுக்குகிறது.
இந்த பொருட்படுத்தக்கூடாத விஷயங்களுக்கு நான் அழாமல் இருப்பதற்கு நன்றியுடையவளாக இருக்க வேண்டும். நான் வலிமையாக இருக்க வேண்டும். அப்படி வலிமையாக இல்லையென்றால் நான் என்ன மாதிரியான அம்மாவாக இருப்பேன்? எனக்கு உண்மையாகவே தெரியவில்லை.
எனக்கு தெரிந்ததெலலாம் நான் இந்த சிறிய உயிரை மிகவும் நேசிக்கிறேன். அது போதுமானது'' என்று தனக்கு பிறக்க குழந்தை குறித்து இலியானா பதிவிட்டிருந்தார்.
பின்னர் தனது காதலர் குறித்து, ஒரு நாள் நான் என்னிடம் நானே இரக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை மறந்தேன். இந்த மனிதர் எனக்கு துணை நின்றார். நான் உடைவதாக அவர் நினைக்கும்போதெல்லாம் என்னை தாங்கி நின்றார். என் கண்ணீரை துடைத்தார்.
முட்டாள் தனமான நகைச்சுவைகளை சொல்லி என்னை சிரிக்க வைத்தார். எனக்கு தேவையான பொழுது என்னைக் கட்டிபிடித்து ஆறுதல் அளித்தார். இனிமேல் எல்லாமே அவ்வளவு கடினமாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.