சின்னத்திரையில் நடித்து சாதிக்கும் பல நடிகைகள் அடுத்ததாக வெள்ளித்திரைக்கு வர ஆசைப்படுவது வழக்கம் தான். அப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்தவர் நடிகை தேவி பிரியா.
Courtesy: Instagram
தேவி பிரியா தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையாகவும் நடித்து வருகிறார். அவர் 23 டிசம்பர் 1982 அன்று இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையில் பிறந்தார். அவர் தமிழில் ஊரு விட்டு ஊரு வந்து, திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
Courtesy: Instagram
இவருக்கு எப்படியாவது நடிப்பில் வர வேண்டும் என்ற ஆசை இருந்ததால் கிடைக்கும் நேரங்களில் ஆடிசன்களில் கலந்துகொண்டார். அப்படித்தான் சன் டிவியில் சீரியல் ஆடிஷன்களில் கலந்து கொள்ளும்போது 'சக்தி' என்ற சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.
Courtesy: Instagram
அவர் தொலைக்காட்சித் துறையில் சக்தி சீரியல் மூலம் அறிமுகமானார். போதைக்கு அடிமையான, கல்லூரிப் பெண்ணாக நடித்துள்ளார். அவர் தொலைக்காட்சி பார்வையாளர்களிடமிருந்து அவரது நடிப்பிற்காக பெரும் வரவேற்பைப் பெற்றார்.
Courtesy: Instagram
அந்த சீரியலுக்குப் பிறகு, அவருக்கு பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து வாய்ப்புகள் வந்தன. பெரும்பாலும் நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது பல்வேறு தமிழ் தொலைக்காட்சிகளில் 25க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார்.
Courtesy: Instagram
தேவி பிரியா தனக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடிக்க கூடியவர். அவரது நடிப்பிற்காக 2009ம் ஆண்டு கலைமாமணி விருதை பெற்றுள்ளார். இவர் முழுக்க முழுக்க வில்லியாகவே நடித்து தாய்மார்களின் வசவுகளை வாங்கியே பழக்க பட்டுவிட்டார்
Courtesy: Instagram
90ஸ் களின் பேவரைட் நடிகையான தேவி பிரியா ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அவர் புதிதாக நடிக்கும் சீரியலில் பாசிட்டிவ் ஆனா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது சன் டிவியில் ஒளிபரப்ப தயாராகியுள்ளது. இந்த சீரியலின் பெயர் புது வசந்தம் ஆகும். இதில் மஹாதேவியாக நடிக்கிறார். செம்பருத்தி சீரியலில் சாம் கதாபாத்திரத்தில் நடித்த ஷியாம் ஜி இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.