இந்தப் படத்தில் பிரபாசுக்கு வில்லனாக நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவிய நிலையில் தற்போது இந்தத் தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படம் குறித்தும், நடிகர் கமல்ஹாசனுடன் தான் இணைந்து நடிக்கவுள்ளது குறித்தும் பிரபாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கமலுடன் இணைந்த பிரபாஸ் மகிழ்ச்சி:
நடிகர் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பட்டானி என இந்திய அளவிலான நட்சத்திரங்களுடன் களமிறங்கியுள்ளது பிராஜெக்ட் கே படம். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் டைரக்ட் செய்து வருகிறார். எதிர்காலத்தையும் கடந்த காலத்தையும் நிர்ணயிக்கும் விதமாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
படத்தின் நாயகனாக பிரபாசும் நாயகியாக தீபிகா படுகோனும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் வில்லனாக நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு இதுவரை இல்லாத வகையில் 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த தகவலை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். தற்போது இந்தப் படம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டிலேயே பிராஜெக்ட் கே படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி 12ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது. படம் 10 மொழிகளில சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கு தற்காலிகாக பிராஜெக்ட் கே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் அதற்கான மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்தப் படத்தில் உலகநாயகன் கமல் இணைந்துள்ளது குறித்து படத்தின் நாயகன் பிரபாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தத் தருணம் தன்னுடைய நினைவில் எப்போதும் நிறைந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிராஜெக்ட் கே படத்தில் கமலுடன் இணைந்து நடிப்பது பெருமையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சினிமாவில் ஜாம்பவானாக திகழும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் அவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து நடிப்பதன்மூலம் பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பிரபாஸ் குறிப்பிட்டுள்ளார். இது கனவு நனவான தருணம் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள பிராஜெக்ட் கே படத்தை இயக்கிவரும் நாக் அஸ்வின் முன்னதாக கீர்த்தி சுரேஷை வைத்து சாவித்ரியின் வாழ்க்கை வரலாறாக மகாநடி படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.