இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த்ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்ததையடுத்து கடந்த 2022 ஆகஸ்ட் 22-ம் தேதி படப்பிடிப்பு துவங்கியது. சென்னை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் எண்ணூர் ஆகியப் பகுதிகளில் நடந்து வருகிறது. இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் இன்று அசத்தலான அப்டேட்டை தயாரிப்புக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 10ம் தேதி படம் வெளியாகும் என்பதை பக்காவான வீடியோவுடன் வெளியிட்டுள்ளது படக்குழு.