லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் ரசிகர்களின் ஆதரவுடன் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.
குறிப்பாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 3 நிமிடங்களே நடித்திருந்தாலும் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா மிரட்டியிருந்தார்.
ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க மறுத்தாரா அமிதாப் பச்சன்?:
நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் ரிலீசானது விக்ரம் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அவரது முந்தைய படங்களான கைதி, மாஸ்டர், மாநகரம் போன்ற படங்களின் வசூலை மிஞ்சி, இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இவரது LCU வகையிலான பாணி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருந்தது.
இந்தப் படத்தில் சிறிய கேரக்டர்களில் நடித்திருந்தவர்களும் மிகுந்த கவனத்தை பெற்றனர். ஏஜெண்ட் டீனா, கமலின் மகனாக வரும் காளிதாஸ் போன்றவர்களும் படத்தின் நகர்விற்கு முக்கிய காரணங்களாக அமைந்தனர். குறிப்பாக ரோலக்ஸ் என்ற கேரக்டரில் படத்தில் 3 நிமிடங்களே நடித்திருந்தார் நடிகர் சூர்யா. ஆனால் இந்த கேரக்டர், மற்ற கேரக்டர்களை தூக்கி சாப்பிடும் வகையில் மிகவும் மிரட்டலாக அமைந்தது. சூர்யாவை இப்படியொரு கேரக்டரில் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
முன்னதாக கேங்கஸ்டர் கேரக்டர்களில் சூர்யா நடித்திருந்தாலும் இந்த ரோலக்ஸ் கேரக்டர் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. சின்ன சின்ன அசைவிலும் மிரட்டலை காட்டியிருந்தார் சூர்யா. இந்தப் படத்திற்காக நடிகர் சூர்யாவை தான் அணுகியபோது 100 சதவிகிதம் இந்த கேரக்டரை அவர் செய்யமாட்டார் என்று நினைத்துதான் தான் சென்றதாகவும் ஆனால் யோசித்து சொல்வதாக கூறிய சூர்யா, இரவு 10 மணியளவில் தனக்கு போன் செய்து செய்யலாம் என்று கூறியதாகவும் தான் நம்ப முடியாமல் திரும்ப கேட்டு உறுதி செய்துக் கொண்டதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னதாக இந்த கேரக்டருக்காக நடிகர் அமிதாப் பச்சனை படக்குழு அணுகியதாகவும் ஆனால் அவர் இந்த கேரக்டரை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்தியாவில் கமல், ரஜினி ஆகியோருடன் மிகவும் இணக்கமான உறவை மெயின்டெயின் செய்து வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். ஆனால் கமலின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான விக்ரம் படத்தில் நடிக்க அவர் மறுத்த விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தின் ஹைலைட்டாக அமைந்த கேரக்டர் ரோலக்ஸ். இந்த கேரக்டரில் சூர்யா தன்னை சிறப்பாக பொருத்தியிருந்தார். மிரட்டலான சூர்யாவை பார்க்கும்போது, அவரது சாப்ட்டான மற்ற படங்களை அவற்றுடன் ஒப்பிட்டு பார்க்க ரசிகர்கள் தவறவில்லை. அந்த அளவிற்கு அந்த கேரக்டரை சக்சஸ் செய்து காட்டியிருந்தார். இந்நிலையில், இந்த கேரக்டருக்காக முதலில் அணுகப்பட்டவர் அமிதாப் பச்சன்தான் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அமிதாப் இந்த கேரக்டரில் எப்படி செட் ஆகியிருப்பார் என்பதையும் ரசிகர்கள் யோசிக்க தவறவில்லை.