4 வருஷம்..சிவாங்கி வெளியிட்ட எமோஷனல் போஸ்ட்..இது மேலும் வருத்தமான செய்தி.!

post-img

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனல் போஸ்ட் ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த நான்காவது சீசனில் தான் குக்காக மாறி இருக்கிறார்.இந்த நிலையில் சிவாங்கி என்ன பதிவு வெளியிட்டார் என்றும் அதற்கு ரசிகர்களின் கருத்து என்ன என்பது பற்றியும் பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய பாட்டால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க அடி எடுத்து வைத்த சிவாங்கிக்கு அந்த நிகழ்ச்சி பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. சிவாங்கியின் ஸ்பெஷலான குரல் அவருக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மைனஸாகத்தான் அமைந்தது. ஆனால் அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த சிவாங்கிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் திருப்புமுனையை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் கோமாளியாக சிவாங்கி அறிமுகமானதும் இவருடைய சுட்டித் தனத்தை அதிகமான ரசிகர்கள் ரசிக்க தொடங்கிவிட்டனர். கோமாளி என்றால் இப்படித்தான் ஜாலியாக இருக்க வேண்டும் என்று பலர் இவருக்கு சப்போர்ட் கொடுக்க தொடங்கி இவருக்கு இணையத்தில் அதிகமான ஃபேன்ஸ் பேஜ் அதிகரித்து விட்டது. அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கியின் பாடலும் பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டது.

அதனாலேயே சிவாங்கிக்கு அடுத்தடுத்து பல மேடை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சிவாங்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் நான்காவது சீசனில் குக்காக களம் இறங்கி இருக்கிறார். இது பலருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் இதுவரைக்கும் கோமாளியாக இருந்து சமையல் தெரியவில்லை என்று இருந்த சிவாங்கியை இப்போது குக்காக மாறி சமையல் செய்து அசத்த போகிறார் என்று தான் கேள்வி கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் சிவாங்கி சில வாரங்களுக்கு முன்பு நான் இந்த ஒரு சீசனில் மட்டும்தான் கலந்து கொள்வேன். இனிவரும் சீசனில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று கூறியிருந்தார் .அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியில் குக்குகள் அடுத்த சீசனில் தொடர முடியாது என்று ஒரு காரணம் இருப்பது தான் இந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவாங்கி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடைசியாக எடுத்த புகைப்படத்தை போட்டு எமோஷனலாக நான்கு வருட பயணம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு பிறகு அதிகமான ரசிகர்கள் இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அதோடு நீங்கள் ஃபீல் பண்ணாதீங்க நீங்க அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருக்கும் என்று கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்னும் ஒரு சில நெட்டிசன்கள் எப்படியும் எந்த சீசனில் உங்களை ஜெயிக்க வைத்து விடப் போகிறார்கள் அப்புறம் எதுக்கு இந்த பீலிங் என்று கலாய்த்து கொண்டும் வருகிறார்கள்.


Related Post