மாடர்ன் உடையில்.. கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை உமா பத்மநாபன்..! – வைரல் கிளிக்ஸ்..!

post-img


நடிகை உமா பத்மநாபன் ( Uma Padmanabhan ) சென்னையை சேர்ந்த இவர் SIET கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு மீடியா மீதான ஆர்வத்தில் சன்டிவியில் ஜாப் அப்ளை செய்துள்ளார். செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

பிறகு 1990’s வணக்கம் தமிழகம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். பிரபலங்கள் பலரையும் நேர்காணல் செய்துள்ளார். இந்த ஷோவை 1000 எபிசோடுகளுக்கு இவரே காம்பெயரிங் பண்ணியுள்ளார். இதன் மூலம் ரொம்பவே பிரபலமாக அறியப்பட்டார்.

அதன்பிறகு 2000ஆம் ஆண்டு ராஜ் தொலைக்காட்சியில் ஒரு குடும்பம் ஒரு ரகசியம், ஜெயா டிவியில் வீட்டுக்கு வீடு லூட்டி என்ற காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

2013ல் ஜீ தமிழின் ஒரு தாயின் சபதம், ஜெயா டிவியில் செல்லமே செல்லமே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். டிவியில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சினிமாவில் நடித்தார். திரைப்படங்களில் டிவியில் விவாதிப்பது போல காட்சி வந்தாலே உமாதான் நடிப்பார்.

எல்லா வகைகளிலும் நியூஸ் ரீடிங்கும் காம்பியரிங்கும் தனித்துவமானது. தூர்தர்ஷன் யுகத்திற்குப் பிறகு தனியார் சேனலான சன் டிவி முன்னணிக்கு வந்த ஆரம்ப காலக் கட்டத்தில் இது நிகழ்ந்தது.


சேனல் ஆரம்பித்த ஆறு மாதத்திலேயே நான் அங்கு சேர்ந்தேன். இப்போது மாதிரி ப்ராம்ப்டரை பார்த்து நியூஸ் படிக்க முடியாது. எழுதி வைத்து படிக்க வேண்டும் கேமராவையும் பார்க்க வேண்டும். காம்பியரிங்கிலும் சவால்கள் ஏராளம் என்கிறார்.


1998ல் முதன் முதலாக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நேர்காணல் செய்யும் கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து ஏய் ரொம்ப அழகா இருக்க, உன்னாலே உன்னாலே படத்தில் கார்த்தியின் சகோதரியாக சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

பிறகு ரஜினியின் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவின் அம்மாவாக, விண்ணை தாண்டி வருவாயா சிம்புவின் அம்மாவாக நடித்தார். பிறகு தனுஷின் உத்தமபுத்திரன், நண்பன் படத்தில் ஸ்ரீகாந்தின் அம்மாவாக எமொஷனலாக நடித்திருப்பார்.

ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகா அம்மா, ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவி அம்மா, கார்த்தியின் தோழா, NGK சூர்யா அம்மா என முன்னணி நடிகர்களுடன் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். சூப்பர் ஸ்டார், விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர்.

சினிமாவில் 40 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் உமா. இந்நிலையில், இவரது சமீபத்திய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயதிலும் இப்படியா..? இன்னும் இளமையாகவே இருக்கிறார்.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.
 

 

Related Post