நடிகை ரோஜாவின் மகளா இது? நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..

post-img

தென்னிந்திய சினிமாவின் உட்சபட்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரோஜா கடந்த 1992 ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  

முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரோஜாவுக்கு தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் படங்கள் கியூவில் காத்திருந்தது. தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வீரா, அதிரடி படை, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்து தமிழில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். 

ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்த ரோஜா தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். 

ஒட்டுமொத்த தென்னிந்தியாவையே தனது அழகினால் ஆட்டிப்படைத்த ரோஜா கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருந்த செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் பெருமளவு இன்ட்ரெஸ்ட் காட்டாத ரோஜா அரசியலில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். 

1999 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரோஜா பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆந்திர மாநிலத்தில் எம்எல்ஏ-வாக பதவி வகித்து வருகிறார். தற்போது அரசியல் வாழ்க்கையில் தீவிரம் காட்டி வரும் ரோஜா சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். 

இந்த நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகாவின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காங்களா, படத்தில் ஹீரோயினாகவே நடிக்கலாமே என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர். 

Related Post