மாவீரன் படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த சிவகார்த்திகேயனிடம் அவர் குல்லா அணிந்திருப்பதன் காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்விஎழுப்பினர்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் பிரபல நடிகர் ஒருவர் கடவுளாக குரல் கொடுத்திருக்கிறாராம்.
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் சிவகார்த்திகேயன் குல்லா அணிந்தே பங்கேற்றார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் வரை இதனைக் கழற்றக்கூடாது என என்னுடைய இயக்குநர் கூறியுள்ளார்.
அதனால் இதனை நான் அணிந்துள்ளேன். எவ்ளோ வெயில் அணிந்தாலும் கழட்ட முடியாத கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இதுவரையில்லாத வித்தியாசமான தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.