பிரபல சீரியல் நடிகர் தினேஷ் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் தான் இவருடைய மனைவியும் பிரபல சீரியல் நடிகையுமான ரச்சிதா மகாலட்சுமி இவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
தன்னிடம் ஆபாசமாக பேசுகிறார், கொலை மிரட்டல் விடுகிறார் உள்ளிட்ட காரணங்களை கூறி தினேஷ் மீது புகார் கொடுத்து இருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
இது குறித்து பேசிய தினேஷ், அந்த புகார் போலியானது. உடன் இருக்கும் வக்கீல்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இப்படியான சில பாயிண்டுகளை சேர்த்து இருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி.
இத்தனை நாள் அவருடன் சேர்ந்து வாழ முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால், எப்போது என் மீது இல்லாத பொல்லாத விஷயங்களை கூறினாரோ..? அப்போதிலிருந்து அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசைப்படுவதும் எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றதாகி விடுகிறது.
எனவே, நீதிமன்றத்தில் விவாகரத்து கொடுத்து விடுகிறேன் என கூறியிருந்தார் தினேஷ். கடந்த சீசனில் ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இந்த சீசனில் தினேஷ் கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் பிரதீப் இதற்கு முன்னாள் பிக் பாஸ் நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்புகிறார்.
இதற்கு பதில் அளித்த தினேஷ், பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. போன சீசனில் என்னுடைய மனைவி கலந்து கொண்டார் அவருக்காக பார்த்தேன் என கூறியிருக்கிறார்.