விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக முன்னணி நடிகர்கள் மற்றும் அவர்களின் படங்களையும் டிடி தொகுத்து வழங்கி வருகிறார்.\
இதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் டிடி, தொடர்ந்து வெளிநாட்டு பயணங்களின் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறது.
டிடி திருமணம் செய்ய விரும்பும் நபர்: விஜய் டிவியின் பிரபல ஆங்கராக பல முன்னணி நடிகர்களின் பேட்டிகளையும் அவர்களின் படங்களின் ப்ரமோஷன்களையும் சிறப்பாக செய்து வருபவர் டிடி. முன்னதாக சேனலின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, காபி வித் டிடி நிகழ்ச்சியின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பாளராக ரசிகர்களை கவர்ந்துவரும் டிடி, தொடர்ந்து பல இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளையும் டிடிக்கு பெற்று தந்து வருகிறது. சுந்தர் சியின் காபி வித் காதல், ப பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டிடி, அடுத்ததாக அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள மத்தகன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான பிரமோஷன்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டிடி பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய டிடி, தனக்கு பாலிவுட் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் மிகவும் பிடித்தமான நடிகர் என்று தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய டிடி, அடுத்த ஜென்மத்தில் அவரை திருமணம் செய்துக் கொள்ளவும் விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு அவரது இசையில் மிகுந்த விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்ட டிடி, விவாகரத்தும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியொன்றில் பேசிய டிடி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் குறித்த எந்த புரிதலும் இல்லாமல் தான் இருந்ததாக தெரிவித்துள்ளார். நாம் சந்தோஷமாக இருக்க திருமணம் செய்து கொள்வது மட்டும் பலனளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் திருமணம் செய்துக் கொண்டே ஆக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்றும் டிடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டில் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் டிடி. பெற்றோர் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணம், சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் டிடி, தொடர்ந்து அதிகமான பதிவுகளையும் ஷேர் செய்து வருகிறார். இவரது அடுத்தடுத்த வெளிநாட்டு சுற்றுலாக்களின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.