காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமியும் தினேஷ் கார்த்திக்கும் சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்களுடைய கம்பளைண்ட் காரணமாக போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் மூலம் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி அந்த சீரியலில் அவரோடு நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர்களுடைய திருமண வாழ்க்கை பல வருடங்களாக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாள் வரைக்கும் இருக்க வேண்டும் என்று வைராக்கியத்தோடு இருந்து வந்த ரச்சிதா அதற்கு சில வாரங்களுக்கு முன்பு வாக்குப்பதிவு அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். இது அவருக்கு மட்டும் அல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் வெளியே வந்த பிறகு ரச்சிதா ஒரு முக்கியமான முடிவு எடுப்பார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.
அது ஒன்றுமில்லை ஏற்கனவே ரச்சிதா அவருடைய கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் ஆணித்தரமாக நம்பி எதிர்பார்த்து இருந்தனர். காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா இருக்கும்போது அவருடைய கணவர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார். அதனால் எப்படியும் கணவரை புரிந்து கொண்டு ரச்சிதா சேர்ந்து வாழ்ந்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர் .
ஆனால் வெளியே வந்த பிறகும் ரச்சிதா அதே பழைய நிலைமையில் தான் இருக்கிறார். எந்த ஒரு மாற்றமும் இவருடைய வாழ்க்கையில் ஏற்பட வில்லையே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்புதான் ரச்சிதா எந்த பிடியும் கொடுத்து வராமல் இருப்பதால் அவருடைய கணவர் ஆன தினேஷ் விவாகரத்து செய்வதற்காக அதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் நேற்று இரவு மாங்காடு காவல் நிலையத்தில் ரச்சிதா பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். அதில் தனது கணவர் தினேஷ் செல்போனில் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதோடு மிரட்டல் விடுப்பதாகவும் கூறி இருக்கிறார். இந்த புகாரின் பேரில் போலீசார் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.