விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். பீஸ்ட் தோல்வி, வாரிசுக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தைத் தொடர்ந்து லியோவில் அவர் நடித்துவருவதால் இந்தப் படம் கட்டாயம் ஹிட்டாக வேண்டும் என விஜய்யும், அவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்களும் ஹிட்டாகியிருப்பதால் லியோவும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடையே இருக்கிறது.
விஜய் 68: விஜய் லியோவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது 68ஆவது படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற பேச்சு எழுந்தது. முதலில் தெலுங்கிலிருந்து ஒரு இயக்குநர் இயக்குவார் என கூறப்பட்ட சூழலில் ஏஜிஎஸ் பேனரில் விஜய்யை வெங்கட் பிரபு இயக்குவார் என்ற அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்துக்கு பிறகு அவர் விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன கதை?: வெங்கட் பிரபு அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதேபோல் விஜய்க்கும் ஒரு தரமான படத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அரசியல் களத்தை அடிப்படையாக வைத்துதான் விஜய் படம் உருவாகும் என்று கூறப்பட்ட சூழலில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோவை வைத்துதான் படம் உருவாகிறது என்று லேட்டஸ்ட் தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்டேட் தொல்லை: விஜய்யை வெங்கட் பிரபு இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் பத்திரிகைகளும், ரசிகர்களும் பெரும்பாலும் லியோவை மறந்தேவிட்டார்கள். வெங்கட் பிரபு எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் விஜய் 68 படத்தின் அப்டேட் குறித்தே பலரும் கேட்டுவருகிறார்கள். இந்தச் சூழலில் நேற்று ரெஜினா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொள்ளும்போதும் அதே கேள்வி கேட்கப்பட்டது.
விஜய் திட்டுவார்: அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, "லியோ படம் வந்த பிறகுதான் விஜய் 68 படம் குறித்த அப்டேட் வெளியே வரும். அதற்கு முன்னதாகவே அந்தப் படம் குறித்து பேசினால் என்னடா நீ எல்லா இடத்துக்கும் போய் படம் பற்றி பேசுற என விஜய் கண்டிப்பாக என்னை திட்டுவார். எனவே லியோ ரிலீஸுக்கு பிறகுதான் தளபதி 68 அப்டேட்" என்றார் திட்டவட்டமாக. இப்படத்தின் பூஜை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.