திமிரு படத்தில் , ஏலேய் இஸுக்கு என்ற டயலாக் பேசியே பிரபலமானவர் சிரியா ரெட்டி. இவர் சமீபத்தில் வெளிவந்த சுழல் என்ற அமேசான் வெப் தொடரில் நடித்தார். இவர் சுழல் வெளிவந்து ஒரு வருடத்தை அடைந்த ஒட்டி வீடியோ ஒன்றில் வந்தார்.
Courtesy: Instagram
இந்திய கிரிக்கெட் வீரரான பரத் ரெட்டிக்கு பிறந்தவர் ஸ்ரீயா. குட் ஷெப்பர்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தார். அவர் குழந்தையாக இருந்தபோது, கிரிக்கெட் வீரர்களான ரவி சாஸ்திரி மற்றும் சந்தீப் பாட்டீல் அவர்களின் வீட்டிற்குச் சென்றுயுள்ளார். அங்கு அவரது குரலுக்காக பாராட்டினர்.
Courtesy: Instagram
பள்ளியின் போது, அவருக்கு மாடலிங் வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் அவரது தந்தை அவரை கல்வியை முதலில் முடிக்க வேண்டும் என்று கூறியதால் , மாடலிங் போகாமல் நிராகரிக்க வேண்டியதாயிற்று. முன்னணி மியூசிக் சேனலான சதர்ன் ஸ்பைஸ் மியூசிக்கிற்கான ஆடிஷனுக்கு அவர் வாய்ப்பு வந்தது.
Courtesy: Instagram
எஸ்எஸ் மியூசிக் மூலம் விஜே தேடலில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஸ்ரீயா, கனெக்ட் மற்றும் ஃபோனெட்டாஸ்டிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கினார். இதில் , தேர்வு செய்யப்படுவதற்கு முன் ஐந்து ஆடிஷன்கள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Courtesy: Instagram
அவர் எஸ்எஸ் முசிஸில் 'விஜே ஸ்ரீயா' என்ற பெயரில் மிகவும் பிரபலமானார். இளம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானார்.அவரது முதல் படத்தில் நடிப்பதற்காக அவரது தந்தையின் கையெழுத்தை அவர் தூங்கும் போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறி தனது முதல் தெலுங்கு படத்தில் நடித்தார்.
Courtesy: Instagram
ஆனால் அவர் நடித்து வெளியில் வந்த முதல் படம் பாலாஜி சக்திவேலின் இயக்குனராக அறிமுகமான சாமுராய் படமாகும், இதில் அவர் விக்ரமுடன் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது முதல் தெலுங்கில் வெளியான அப்புடப்புடு பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது
Courtesy: Instagram
அதைத் தொடர்ந்து அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக படங்களில் நடிக்கவில்லை. பின்னர் பல மலையாள படங்களில் நடித்தார். அவர் திமிரு படத்தின் மூலம் பிரபலமானார். திமிரு படத்தில் கதாநாயகியாக நடித்த ரீமாசென் நடிப்பில் இருந்து விலகியுள்ள நிலையில், வில்லியாக நடித்த சிரியா ரெட்டி உடல் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சிகளை செய்து படங்களில் நடித்து வருகிறார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.