மனக்கவலை, உடல் களைப்பு, நோய் உள்ளிட்டவைகளை போக்கும் அருமருந்து காமெடிதான். அதற்கு வயிறு குலுங்க சிரித்தால் போதும். ஆனால் ஒருவரை சிரிக்க வைப்பது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல.
அந்த வேலையைதான் காமெடியன்கள் செய்கிறார்கள். 80, 90 களில் காமெடியை பார்ப்பதற்காகவே மக்கள் தியேட்டர்களில் குவிந்தனர். அது போல் படம் ஓடாவிட்டாலும் 5 அல்லது 6 காமெடிகள் இருந்து விட்டால் போதும் அதை பார்த்து ரசிக்கவே மக்கள் கூட்டம் கூடும்.
கவர்ச்சி, பாடல்கள் இவற்றை தாண்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் தந்திரமாகவே இயக்குநர்கள் இதை வைத்திருந்தனர். அந்த வகையில் தற்போது டிவி முன்பு உட்கார்ந்தால் போதும் காமெடி நிகழ்ச்சிகள் ஏராளம். அசத்த போவது யாரு, அது இது எது, கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி என ஏராளமான நிகழ்ச்சிகள் உள்ளன. அப்படி ஒரு சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு சிரித்து சிரித்து உடல் ஆரோக்கியமாக இருந்ததால் நீண்ட காலமாக குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை உண்டானதாகவும், ஐசியூவில் இருந்த ஒருவரின் தாய் உடல் நலம் தேறி பொது வார்டுக்கு வந்துவிட்டதாகவும் அதற்கு நன்றி என்றும் தெரிவித்தார். இவற்றை செஃப் வெங்கடேஷ் பட் , புகழ், சிவாங்கி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் புகழ், பாலா, மணிமேகலை, குரேஷி உள்ளிட்டோரின் காமெடி அனைவரையும் மகிழ்விக்கும். இந்த நிகழ்ச்சியில் பிரபலமான புகழ் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் காதலித்த பென்ஸியை மணந்தார்.
இவரது திருமணத்திற்கு சிவாங்கி, பாலா, மணிமேகலை உள்ளிட்டோர் நேரில் போய் வாழ்த்தினர். இந்த நிலையில் தற்போது புகழுக்கு புரமோஷன் கிடைத்துள்ளது. இது தற்காலிகம்தான் என்றாலும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். விஜய் டிவியில் அண்மையில் தொடங்கப்பட்ட Ready Steady Po எனும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக புகழ் வருகிறார்.