நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ளப்போவது ஒரு பிரபல நடிகை என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த விஷால், தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். 45 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாகவே கேட்கப்பட்டு வருகிறது.
2019 மார்ச் 16 ஆம் தேதி விஷாலுக்கும், ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் இடையே திடீரென நிச்சயார்த்தம் ஏற்பட்டு கோலிவுட்டை பரபரப்புக்கு உள்ளாக்கியது.
இருப்பினும் இந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லாமல் இடையிலேயே உறவு முடிந்தது. இதன்பின்னர் நாடோடிகள் பட நடிகை அபிநயாவுடன் விஷால் டேட்டிங்கில் இருப்பதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் பிரபல நடிகை லட்சுமி மேனனும், விஷாலும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கும்கி, சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்ளிட்ட படங்களில் லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். ஆனால் இந்த தகவல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.