சினிமாவில் வாய்ப்பு கிடைத்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக உருமாறி தற்போது தென்னிந்தியா சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி தற்போது தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட படங்கள் இவரின் சினிமா பயணத்திற்கு வெற்றி படிக்கட்டாக அமைந்தது.
அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் மக்கள் செல்வனாக வலம் வரும் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மெர்சல் செய்துள்ளாராம். சமீபகாலமாக தமிழில் வில்லன் கதாபாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட் சினிமாவிலும் வில்லனாக களம் இறங்கியுள்ளார்.
ஜவான் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் 50வது படமான குரங்கு பொம்மை படத்தின் தகவல்களும் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
விஜய்சேதுபதியின் பிள்ளைகளை பார்த்த ரசிகர்கள் உங்க மகன், மகள் நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார்களே என கமெண்ட் செய்து, புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வைரல் செய்து வருகின்றனர்.