நேர்முகத் தேர்வில் இருந்து பாதியில் கிளம்பிய சக்தி - ’மீனாட்சி பொண்ணுங்க’

post-img

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் யமுனா சக்திக்கு போன் செய்து அம்மா காணவில்லை என்ற விஷயத்தை சொன்ன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அம்மா காணவில்லை என்று யமுனா சொன்னதை யோசித்தவாறு சக்தி இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு செல்ல அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சக்தி எழுந்து வெளியே போகிறாள். இப்படி வெளியே வந்த சக்தி வெற்றியிடம் சொல்லாமல் வீட்டிற்க்கு போய் விடுகிறாள்.

அடுத்ததாக சத்தி யமுனாவை சென்று சந்திக்க, அங்கே வந்த வெற்றி அவர்களை திட்டி, மீனாட்சியம்மா மௌன விரதம் இருக்கும் கோவிலுக்கு அழைத்து செல்கிறான்.

சக்தி மீனாட்சியிடம் சென்று பேச, மீனாட்சி மௌன விரதம் கலைத்து ஐஏஎஸ் நேர்முகத் தேர்வு நல்ல முறையில் நீ முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மௌன விரதம் இருந்தேன் என்று சொல்ல, சக்தி மீனாட்சி சொன்னதைக் கேட்டு திகைத்து நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Post