ஜிம்மில் ஷார்ட் உடையில் என்னவொரு லுக்.. ஷிவானியின் செம பிக்ஸ்!

post-img

செம க்யூட்டான அழகியாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போஸ்ட்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஷிவானி நாராயணன் விஜய் டிவியின் சீரியல்களில் நடிக்கும் போதே ஏகப்பட்ட இளைஞர்களின் இதய ராணியாக மாறினார்.

பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் கமல்ஹாசனுக்கு பிடித்தமான போட்டியாளர்களில் ஒருவராக மாறினார்.

முதல் படமே கமல் படம்:

அதன் விளைவாக பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷிவானி நாராயணன்.

விஜய்சேதுபதியின் மூன்றாவது மனைவியாக அந்த படத்தில் ஷிவானி நடித்த நிலையில், அவருக்கு விஜய்சேதுபதி துப்பாக்கி சுட சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் எல்லாம் இடம்பெற்றிருந்தது.

வரிசையாக படங்கள்:

விக்ரம் படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த ஷிவானி நாராயணன் ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். அதன் பின்னர், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விஜய்சேதுபதியின் டிஎஸ்பி மற்றும் சமீபத்தில் அவர் ஹீரோயினாக நடித்த பம்பர் படம் என வரிசையாக ஷிவானி நடிப்பில் பல படங்கள் வெளியாகின.

பம்பர் படத்துக்கு பிறகு ஷிவானி எந்த படத்தில் நடித்து வருகிறார் என்கிற எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த படத்தை கவனமாக தேர்வு செய்து நடிக்க காத்திருக்கிறார்.

ஜிம்மில் ஷிவானி:

நடிகை ஷிவானி நாராயணன் தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைக்கவும் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் அடிக்கடி ஜிம்முக்கு மீண்டும் விசிட் அடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜிம்மில் அவர் எடுத்துக் கொண்ட க்யூட்டான சில போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட அவரது 3.6 மில்லியன் ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

குவியும் ஜொள்ளு கமெண்ட்ஸ்:

ஷிவானி நாராயணன் போட்டோ மற்றும் ரீல் வீடியோக்களை வெளியிட்டாலே லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் சும்மா அள்ளும். தொடையழகு தெரிய இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாழைத்தண்டு.. என்றும் லெக்பீஸ் என்றும் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Related Post