வெள்ளை நிறப் புடவையில் நடிகை ஷெரின் வெளியிட்ட படங்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின்.
தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். ஷெரின் நடித்த விசில் திடைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
பின்பு திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்த அவர், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
நிகழ்ச்சியில் மீண்டும் ஷெரினின் தமிழ் பேச்சு, க்யூட் ரியாக்ஷன்களை ரசிகர்கள் ரசிக்க தொடங்கினர்.
உடற்பருமனால் அவதிப்பட்ட ஷெரின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும்போது எடை குறைந்து, புதிய தோற்றத்தில் காணப்பட்டார். இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
சமீபத்தில் நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக ஷெரின் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.