`என் இளம் அணி!' - பிசினஸ் உமன் பிரியா பவானி சங்கர் சொந்த உணவகம் குறித்துப் பெருமிதம்

post-img

செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது திரைத்துறையில் கலக்கிக் கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். சமீபத்தில் இவர் நடித்த `ருத்ரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

'இந்தியன் 2' திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், `Liam's Diner' என்கிற தன்னுடைய கனவு உணவகத்தையும் மாம்பாக்கத்தில் துவங்கி இருக்கிறார் பிரியா பவானி சங்கர். இவரின் புதிய தொழில் முயற்சிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்ரம்ஜான்அன்று தன்னுடைய உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், பிரியா பவானி சங்கர்.

அதில், ``எங்களின் சொந்த Liam's Diner உணவகத்தில் ரம்ஜானைக் கழிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டு முன்னேறும் இளம் அணியைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

இவர்கள் எங்களுக்காகச் செய்த பிரியாணி மற்றும் தால்சா சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இங்குள்ள பேன் ஷேக் (Pan shake) எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தமானது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Post