கவுண்டமணி தனது பூஜை அறையில் கடவுளாக கும்பிடுவது யாருன்னு பாருங்க..!

post-img

அதுவும், கிராமிய படங்கள், குறிப்பாக ராமராஜன் படங்கள் என்றால் இருவருமே தீபாவளி கொண்டாடி விடுவர். ரசிகர்களுக்கும் அது தீபாவளி பலகாரமாக, டென் தவுசண்ட் வாலாக மாறிவிடும்.

 

பத்த வெச்சுட்டியே பரட்டை என, டயலாக் பேசி, பாரதிராஜாவின் 16 வயதினிலே, படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் கவுண்டமணி. சரோஜா, குப்பை கொட்றியா, கொட்டு கொட்டு என சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் பெட்டிக்கடை டெய்லர் காளியண்ணன் கேரக்டர், இன்னும் ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலப்படுத்தியது.

கரகாட்டக்காரன் படத்தை இப்போதும் பல தரப்பு ரசிகர்கள் ரசிப்பது கவுண்டமணி– செந்தில் காமெடி காட்சிகளை தான்.

 
கவுண்டமணி
Goundamani

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், சரத்குமார், மோகன், முரளி என அன்றைய நடிகர்கள் துவங்கி இன்று அஜீத், விஜய், சிம்பு வரை காமெடியில் கிங் என்றால், அது கவுண்டமணிதான்.

வயதானாலும், இன்னும் அவரது பேச்சில் நகைச்சுவையும், அவரது கெத்தும் இன்னும் குறையவில்லை. இப்போது கூட, பழைய நட்பை மறக்காமல் நடிகர் மனோபாலா மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பண்பாளர் கவுண்டமணி.

 
 

கடந்த 1980 –90களில் மட்டுமின்றி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி. 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட 49 ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் கவுண்டமணி ஹீரோவாக நடித்திருந்தார்.

 

கவுண்டமணியுடன் செந்தில் மட்டுமல்ல, மற்ற நடிகர்கள் நடித்த நகைச்சுவை காட்சிகளும் மிக மிக வரவேற்பை பெற்றவை. உதாரணமாக ரஜினியுடன் மன்னன், கமலுடன் சிங்காரவேலன், இந்தியன், விஜயகாந்த் உடன் அம்மன் கோவில் கிழக்காலே, சின்னக்கவுண்டர், சொக்கத்தங்கம், அர்ஜூன் நடித்த ஜெண்டில்மேன், ஜெய்ஹிந்த், ஆயுதபூஜை, சரத்குமாருடன் சமுத்திரம் போன்ற படங்களில் நடிதிருகின்றார்.

மேலும், பேண்டு மாஸ்டர், நாட்டாமை, சத்யராஜூடன் மாமன் மகள், தாய்மாமன், பங்காளி, ரிக்ஷா மாமா, கார்த்தியுடன் பொன்னுமணி, ஜெயராமுடன் முறைமாமன், விஜய் உடன் கோயம்புத்தூர் மாப்ளே, அஜீத் உடன் அவள் வருவாளா, சிம்புவுடன் மன்மதன் என, கவுண்டமணி நடித்த காமெடி காட்சிகள் அன்று முதல் இன்று வரை ரசிக்கலாம். இவருக்கு சினிமாவில் ஆரம்ப காலத்தில் உதவி, பட வாய்ப்புகளை பெற்றுத்தந்தது இயக்குநர் பாக்யராஜ்தான்.

கவுண்டமணி
Goundamani

பாரதிராஜா இயக்கிய கல்லுக்குள் ஈரம் படத்தில் டைரடக்கரு, டைரடக்கரு என்ற வசனம், மிக பிரபலமானது. பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா, வாழைப்பழ காமெடி, அடுத்த ஜென்மத்துலயாவது மனுசனா பொறங்கடா, தஞ்சாவூரு கல்வெட்டுல எழுதி வைச்சா, உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் பார்த்து, படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க என இவரது டயலாக் எல்லாமே, காமெடி சரவெடிதான்.

 

எப்போதும் காமெடி உடன், நல்ல சிந்தனைகளை கூறிவரும் கவுண்டமணி, படத்தில் எப்படியோ, அப்படித்தான் நிஜத்திலும் இருப்பார். யாரிடமும் நடிப்பது, போலியாக பாராட்டுவது, குழைவது போன்ற அற்பத்தனங்கள் இல்லாதவர்.

கவுண்டமணி
Thomasalwaedison

அப்படிப்பட்ட இவர், தனது பூஜையறையில் வைத்து கும்பிடுவது யார் என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. இவர், தனது கடவுளாக வழிபடுவது சினிமாவை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனை தான்.

இன்று இந்த பெயர், புகழ், செல்வாக்கான வாழ்க்கைக்கு காரணம், சினிமா. அந்த சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் செயற்கை ஒளிக்கான மின் விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு செய்யும் மரியாதையாக அவரை வைத்து வழிபடுகிறார் கவுண்டமணி.

உண்மையிலேயே அவரது தொலைநோக்கு பார்வையும், பரந்த சிந்தனையும் தெளிவான வாழ்க்கை பற்றிய புரிதலையும் இதன்மூலம் அறிந்துகொண்ட ரசிகர்கள், கவுண்டமணியை மனதார பாராட்டி வருகின்றனர்.

 

Related Post