அந்த வகையில், சிறுவயதில் இருந்தே கேமராவின் கண்களுக்கு முன் நின்றவர் சுஜிதா என்பதால், நடிப்பு மிக இயல்பாக அவருக்கு வருகிறது. உள்ளத்தின் உணர்ச்சிகளை, முகத்தில் அழகாக அவர் பிரதிபலிக்கிறார்.
அதனால், சிறந்த நடிகையாக, அழகான பெண்ணாக ரசிகர்களின் மனதை எளிதில் கவர்ந்து விடுகிறார். தொடர்ந்து, சீரியல்களில் அவருக்கான இடம் தங்கு தடையின்றி கிடைத்து விடுகிறது.
சீரியல் மட்டுமின்றி சினிமா படங்களில், குழந்தை நட்சத்திரமாக சுஜிதா நடித்திருக்கிறார். முந்தானை முடிச்சு படத்தில், பாக்யராஜ் குழந்தையாக இருப்பது பேபி சுஜிதா தான்.
பூ விழி வாசலிலே படத்தில் வாய் பேச முடியாத குழந்தையாக, சத்யராஜிடம் அடைக்கலம் அடைந்த பேபி சுஜிதாவை, அந்த கால வில்லன் பாபு ஆண்டனி கொலை செய்ய துரத்திக்கொண்டே இருப்பார். தேவர் மகன் படத்திலும், கமல் வீட்டில் சிவாஜி கணேசனிடம் பாடும் மூன்று சிறுமிகளில் ஒருவராக சுஜிதா இருப்பார்.
இப்போது, ‘ஒரு கை ஓசை’ என்ற ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர் தனம் அண்ணி கேரக்டர், ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
நடிகை சுஜிதா, ஒற்றுமையாக இருந்த சகோதரர்கள் மூவரும் பிரிந்து இருக்கும் நிலையில், இந்த சீரியல் விறுவிறுப்பான கட்டத்தில், இப்போது சென்றுகொண்டு இருக்கிறது. சுஜிதா, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.
இவரது கணவர் தனுஷ், விளம்பர படங்களின் இயக்குனராக பணி செய்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுஜிதாவின் சகோதரி கல்யாணி, சகோதரர் சூர்யா கிரண் இயக்குநராக உள்ளார்.
சுஜிதாவின் பெற்றோர் மணி மற்றும் ராதா. சுஜிதா சமீபத்தில் புதுவீடு கட்டி கிரஹப்பிரசேம் நடத்தி, புதுமனையில் குடிபுகுந்தார், அந்த புகைப்படங்கள், வைரலானது.
சுஜிதா நடித்த சீரியல்களில் கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, துளசி, மைதிலி, விளக்கு வெச்ச நேரத்தில போன்ற சீரியல்களில், சுஜிதா மிக சிறப்பாக நடித்திருந்தார்.
நல்ல நடிப்புத்திறன் கொண்ட நடிகைகளுக்கு, தமிழ் சினிமாவில் நடிக்க போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. அதில், சுஜிதாவும் ஒருவர். கதாநாயகி வாய்ப்பு இல்லாவிட்டாலும் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க கூட முடியவில்லை.
எனினும் சமூக வலைதளங்களில் அப்டேட் செய்யப்படும் சுஜிதாவின் குடும்பப்பாங்கான புகைப்படங்கள் பார்த்து, அசந்து போய்விடுகின்றனர். அப்படி லேட்டஸ்ட் ஆக வந்த புகைப்படங்கள்தான் இவை.
புடவை, சிலருக்கு மட்டுமே அம்சமாக பொருந்துவிடுகிறது. அவர்களது உடல் அழகை இன்னும் அம்சமாக்கி விடுகிறது. அந்த வகையில், இந்த புடவையில் சுஜிதா, ரசிகர்களை ஏங்க வைக்கிறார் என்றால் அது மிகையல்ல.
இந்த வெண்மை நிற புடவையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கிறார் சுஜிதா.