நடிகை பிரிகிடா சாகாஇரவின் நிழல் திரைப்படத்தில் ஆடையின்றி சில காட்சிகளில் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தில் குறிப்பிட்ட காட்சி நடிக்கும் போது நான் எதை உணர்த்தேன் பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை பிரிகிடா சாகா.
நான் என்னுடைய படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தேன். அப்போது நடிகர் பார்த்திபன் சாரிடம் இன்டர்ன்ஷிப் செய்வதற்காக துணை இயக்குனராக ஒப்பந்தமானேன்.
உண்மையில் இரவின்நிழல் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தின் ஆடிஷனில் நான் கலந்து கொள்ளவில்லை. மாறாக அந்த ஆடிஷனை கவனிக்கும் மேற்பார்வையாளராக இருந்தேன்.
நிறைய பேரை ஆடிஷன் செய்தோம். ஆனால் இறுதியாக இந்த கதாபாத்திரத்தை நீயே செய்து விடு என்று பார்த்திபன் சார் கூறினார்.
இந்த வாய்ப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சிங்கிள் டேக் படத்தில் இப்படியான காட்சிகள் நிறைந்த படத்தில் எப்படி நடிக்க போகிறோம் என்ற பயம் இருந்தது.
ஆனாலும், ஒப்புக்கொண்டு நடித்தேன். மேலும் ஆடையின்றி அமர்ந்திருந்த போது எனக்குள் ஒரு பயம் ஏற்பட்டது. இந்த காட்சி எப்படி வருமோ..? என்ற ஒரு வித உருத்தல் இருந்தது.
ஆனால் படத்தின் கதை, அந்த காட்சிக்கு முன்னால் இடம்பெற்ற காட்சிகள், ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை என அனைத்துமே அந்த காட்சியில் என்னை பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு ஒரு வித பரிதாப உணர்வும் இப்படி ஒரு இப்படிப்பட்ட பெண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நடக்கிறது என்ற ஒரு உணர்வு தான் எழுந்ததே தவிர தவறான எண்ணங்களோ அல்லது கவர்ச்சியாக நடித்திருக்கிறேன் என்ற எண்ணமோ எழவில்லை.
இதனை நான் முன் கூட்டியே கணித்து வைத்திருந்தேன். அதே போல தான் நடந்தது என பேசியுள்ளார் பிரிகிடா சாக.