ஓடிடி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளை விற்பனை செய்வதன் மூலம் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே படஜெட்டை விட அதிகம் வசூலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இருப்பினும் தொலைக்காட்சி சேனல்கள், ஓடிடி என படம் பார்க்க பல தளங்கள் இருந்தாலும் மக்கள் திரையரங்குகளில் படம் பார்க்கவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பதை ரசிகர்கள் பெருமைக்குரிய விஷயமாக கருதுகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அளவில் வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்த படம் எது தெரியுமா? அது விஜய், அஜித், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன், ராம் சரண், யஷ் உள்ளிட்ட கமர்ஷியல் ஹீரோக்களின் படம் இல்லை.
பான் இந்தியன் படமாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மோகன்லாலின் மரக்கார் - லயன் ஆஃப் தி அரேபியன் சீ படம் தான் வெளியீட்டுக்கு முன்பே முன்பதிவின் மூலம் ரூ.100 கோடி வசூலித்த இந்திய படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.