ஒரு கையில் சாமி..! மறு கையில் ஈ.வெ.இராமசாமி..! வணங்கான் போஸ்டரால் வெடித்த சர்ச்சை..!

post-img

நடிகர் அருண் விஜய் இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.


முதலில் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது ஆனால் இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகினார்.


நடிகர் சூர்யா அதனை தொடர்ந்து நடிகர் அருண் விஜய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட நடிகர் அருண் விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.


இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹீரோவான அருண் விஜய் ஒரு கையில் பிள்ளையாரையும் ஒரு கையில் ஈ.வெ.இராமசாமியின் சிலையையும் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கிறார்.

 

உடல் முழுதும் சேரும் சகதியும் ஆக இருக்கும் இவருடைய இந்த போஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.


அதேநேரம் சர்ச்சையையும் கிளப்பியிருக்கிறது. ஒரு கையில் கடவுள் சிலை மறு கையில் கடவுள் நிந்தனை செய்யும் ஈ.வெ.இராமசாமி-யின் சிலை.. என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் பாலா..? என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர் ரசிகர்கள். மேலும், சர்ச்சைக்குரிய விவாதங்களும் இணைய பக்கங்களில் நடந்து வருகின்றது.


என்ன சொல்லப்போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Related Post