திரை உலகப் பொருத்த வரை தினம் தினம் புது முகங்களின் அறிமுகம் அடிக்கடி நடப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. எனினும் தனக்கு திரை உலகில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதை பயன்படுத்தி நிலைத்து நிற்பதோடு தொடர்ந்து பல தலைமுறைகளாக நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அந்த வகையில் இன்றைய பதிவில் மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து தாத்தா, மகன், பேரன், பேத்தி என்று நடித்து வரக்கூடிய கலை குடும்பம் பற்றிய விவரங்களை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தலைமுறை நடிகர் மற்றும் நடிகைகள்..
திரை உலகில் மூன்று தலைமுறைக்கும் மேலாக நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் யார்? என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் முதலில் நாம் பார்க்க இருப்பது பழம் பெரும் நடிகர் முத்துராமன் குடும்பத்தை பற்றியது தான்.
முத்துராமன் பல படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய மகன் நவரச நாயகன் கார்த்திக் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். இவரை தொடர்ந்து இவரது மகன் கௌதம் கார்த்திக் தற்போது தமிழ் திரை உலகில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதை அடுத்து அப்பா மகன் பேரன் என மூன்று தலைமுறையாக இவர்கள் தமிழ் திரை உலகில் கோலோச்சி வருகிறார்கள்.
அடுத்ததாக காமெடி நடிகர்களின் வரிசையில் தனக்கு என்று ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்ட நடிகர் நாகேஷ் இவரது நடிப்பை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. இவரின் மகன் ஆனந்த் பாபு ஒரு மிகச்சிறந்த டான்ஸராக இருப்பதோடு மட்டுமல்லாமல் திரையுலகில் நடிகராக இருந்திருக்கிறார். இதனை அடுத்து இவருடைய மகன் கஜேஸ் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர்களை அடுத்து அடுத்ததாக பார்க்க இருப்பவர் நடிகர் ரவிச்சந்திரன் இவருடைய மகன் தான் ஜார்ஜ் விஷ்ணு இவருடைய மகள் கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் என்பது உங்களுக்கு தெரியுமா?
அடுத்த லிஸ்ட் யாரு..யாரு.. தெரியுமா?
இந்த லிஸ்டில் அடுத்ததாக வருபவர் பழம் பெரும் நடிகை ருக்மணி. இவருடைய மகள் தான் மிகச்சிறப்பான நடிப்பை தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை லட்சுமி. நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவும் தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்து அசத்தியவர்.
மேலும் அடுத்ததாக நடிகர் முரளியை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவருடைய அப்பா கன்னட டைரக்டராக இருந்த சித்த லிங்கையா அடுத்து இவர் தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார்.
இவர்களை தொடர்ந்து தற்போது தென்னிந்திய திரைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் அம்மா தான் மலையாள நடிகையான மேனகா. இவர்களின் பாட்டி சரோஜாவும் நடிகையாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த லிஸ்டில் சிவாஜி கணேசன் குடும்பத்தை சேர்த்துக் கொள்ளலாம். சிவாஜியை அடுத்து அவர் மகன் இளைய திலகம் பிரபு அவரை தொடர்ந்து அவருடைய மகன் விக்ரம் பிரபு திரை உலகில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கிறார்கள்.
அப்பாடா…
இதை அடுத்து 3ஜி ஜெனரேஷனாக நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்களின் விவரங்களை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அப்பாடா என்று பெரு மூச்சு விட்டு விட்டார்கள் என்று சொல்லலாம்.
இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது