தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்குகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெறுகிறது.
இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.
விழாவை ஒட்டி, மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உண்ணும் மதிய உணவு தயாராகி வருகிறது. ஜம்ஜம் சுவீட், மாங்காய் ஊருகாய், இஞ்சி புளி துவையல் புதினா, ஆனியன் வெள்ளேரி தயிர்பச்சடி, கதம்ப பருப்பு பொரியல், உருளை பட்டாணி வருவல், சவ்சவ் கூட்டு, காளிஃபிளவர் பகோடா, வெஜ்புலவு, காரகுழம்பு (கத்திரிக்காய்), மாங்காய், முருங்கை கதம்ப சாம்பார், தக்காளி ரசம், ஆனியன் வடை, அப்பளம், அடபிரதம பாயாசம், மோர் உள்ளிட்ட உணவு வகைகள் கொண்ட மெனு தயாராகி வருகிறது.