சீரியல் நடிகையாக திரை துறையில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். கடந்த 2017 ஆம் ஆண்டு 'மேயாத மான்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வெள்ளித்திரையில் ஹீரோயினாக பிரியா அறிமுகமானார்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ப்ரியாவுக்கு, தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. 'கடைக்குட்டி சிங்கம்' , 'மான்ஸ்டர்' , 'மாஃபியா' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக பிரியா கலக்கி வந்தார்.
வளர்ந்து வரும் இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரும் ப்ரியாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமானாலும் அடுத்தடுத்து வந்த படங்களில் சைடு கதாபாத்திரத்திலேயே தான் பிரியா நடித்து வந்தார்.
இருப்பினும் தற்போது நடித்தால் ஹீரோயின் கதாபாத்திரம் மட்டும் தான் என்று தொடர்ந்து ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் பிரியா நடிப்பில் வெளியான யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டானது.
தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக தனக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள பிரியா கையில் ஏகப்பட்ட பட வாய்ப்புகளுடன் செம பிஸி நடிகையாக உள்ளார். குறிப்பாக கமல் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல் ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ப்ரியா, வெறும் லட்சங்களில் தான் சம்பளம் வாங்குகிறாராம். பொதுவாகவே நடிகைகள் ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்திவிட்டால் தங்களுக்கென சொந்தமாக காரை ஒன்றை வாங்கிக்கொள்வது வழக்கம்.
அந்தவகையில் பிரியா பவானி சங்கரும் சொந்தமாக BMW x3 கார் வைத்துள்ளார். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியா தனது BMW காருடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்வது வழக்கம். இந்த நிலையில் பிரியாவின் BMW காரின் விலை குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திகியுள்ளது. பிரியா வைத்திருக்கும் BMW x3 காரின் விலை சுமார் ரூ.70 முதல் 75 லட்சம் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.