வெற்றிகரமான வெளிச்ச நடிகர் சினிமாவில் கத்துக்குட்டியாக இருந்தபோது அடங்கி ஒடுங்கி இருந்துவிட்டு ஒரு சில படங்கள் ஹிட் ஆனதும் நானும் ஹீரோ என்று காலரை தூக்கிக்கொண்டு நடந்தார்.
அப்போது வடநாட்டிலிருந்து இறக்குமதியான இருந்த நடிகையுடன் சில படங்களில் நடிக்க அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்றன.
தொடர்ந்து அவருடன் காதல் வயப்பட்டார். ஆனால் நடிகை வேறு ஆள் என்பதால் வெளிச்ச நடிகரின் தந்தை கடுமையான கோபத்திற்கு ஆளானார். இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்கவே மாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்துள்ளார்.
இதனால் பல்வேறு களேபரங்கள் நடந்திருக்கிறது. வெளிச்ச நடிகர் செய்வதறியாமல் மதில் மேல் பூனையாக இருந்திருக்கிறார்.
இவர் மதில் மேல் பூனையாக இருந்து கொண்டு மறுபக்கம் படங்களிலும் கவனமாக இருந்திருக்கிறார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்துக்கொண்டு தொழில் வாழ்க்கையை விட்டு விட்டால் விஷயம் வீணாகிவிடும் என்று உணர்ந்து வைத்திருக்கிறார். காதல் வாழ்க்கை ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய படங்களில் செலுத்தும் கவனத்தை ஒரு சதவீதம் கூட திரும்ப பெரும் முடிவில் அவர் இல்லை.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வடநாட்டு நடிகை இருவரும் காதலிக்கிறோம்.. வீட்டில் அனுமதி பெற முடியவில்லை.. பிறகு எதற்கு காதல்..? என்று நடிகரை விளாசி இருக்கிறார்.
ஆனால் நடிகையின் மீது இருந்த காதலையும் விட்டுக் கொடுப்பதாக இல்லை வெளிச்ச நடிகர். இப்படி மதில் மேல் பூனையாகவே நடிகரின் காதலும் காதல் வாழ்க்கையும் போய்க் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் வெளிச்ச நடிகர் மீது நம்பிக்கை இழந்த வடநாட்டு நடிகை ஜீரோ ஹேட்டர்ஸ் நடிகருடன் ஒரு படத்தில் ஜோடி போட்டார்.
படம் வசூலில் தூள் கிளப்பியது.. ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த மகிழ்ச்சியுடன் உடனே இன்னொரு படத்திலும் அதே நடிகருடன் ஜோடி போட்டார் அம்மணி. இருவருக்கும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நெருக்கம் கேரவேன் தாண்டி.. அவருடைய அரை வரை நீண்டு இருக்கிறது.. ஒரு பக்கம் வெளிச்சம் நடிகரை காதலித்துக் கொண்டு மறுபக்கம் ஜீரோ ஹேட்டர்ஸ் நடிகருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்.
இந்த விஷயத்தை எப்படியோ மோப்பம் பிடித்த வெளிச்ச நடிகர். ஒருமுறை நேரடியாகவே அவரிடம் கேட்டிருக்கிறார். தொலைபேசியில் பேசிய அவர் நான் இப்போது அங்கு வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அப்படி கூறியதும் நடிகை அதிர்ச்சியானதை அவர் உணர்ந்திருக்கிறார். ஏன் வான் அங்க தான் இருக்கானா..? எதுக்கு ஷாக் ஆகுற.. என்று பேசியிருக்கிறார். இங்கு யாரும் இல்லை நீ உடனே வா என்று கூறியிருக்கிறார். அவர் வருவதற்குள் நடிகரை எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
ஆனால் அவனுக்காக எல்லாம் பயந்து கொண்டு என்னால் போக முடியாது அவன் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்.. உன்னை காதலிப்பவன் எதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.. உனக்கு புரியவில்லையா…? என்று வடநாட்டு நடிகையிடம் நூல் விட்டு பார்த்திருக்கிறார்.
ஆனால் தயவு செய்து இப்போது போங்கள் என்று அனுப்பி இருக்கிறார் அம்மணி. தொடர்ந்து அங்கு வந்த வெளிச்ச நடிகர் இதற்கு மேல் நீங்க பொறுமையாக இருக்க வேண்டாம் நான் வீட்டில் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறேன் என்று விடாப்பிடியாக நின்று திருமணத்துக்கு சம்பந்தமும் வாங்கி இருக்கிறார்.
எல்லாம் அடங்கி ஒடங்கிய பின்பு திருமணம் நிச்சயதார்த்தம் என்று ஆகிவிட்ட பிறகும் ஜீரோ ஹேட்டர்ஸ் நடிகர் விடுவதாக இல்லை. அதன் பிறகு பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு மீடியா பயத்தை காட்டி அவருடன் நான் உறவை துண்டித்திருக்கிறார் அம்மணி.