கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படம் தற்போது வரை 1700 கோடி ரூபாய்களை வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு இளம் பெண் உயிரிழந்தார்.
இந்த இளம் பெண் உயிரிழந்ததற்கு காரணம் அல்லு அர்ஜுன் தான் என்றும் காவல்துறையினர் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வர வேண்டாம் என எச்சரித்தும் அல்லு அர்ஜுன் அவனை மதிக்காமல் திரையரங்கிற்கு வந்து அதிக அளவில் கூட்டம் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் தான் அந்த இளம் பெண் இறந்து இருக்கிறார் என்று அல்லு அர்ஜுன் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது ஆந்திரா அரசு.
இது தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா துறையின் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் இனிமேல் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று முடிவு எடுத்திருக்கிறது ஆந்திர அரசு.
தமிழ்நாட்டில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியான போது அதிகாலை காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் அந்த நேரத்தில் ரசிகர்கள் சிலர் கொண்டாட்டம் என்ற பெயரில் பேருந்தின் மீது நின்று ஆடுவது கேட் மீது ஏறி குதிப்பது என பல்வேறு விபத்துகளில் சிக்கி மரணம் அடைந்தனர்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இனிமேல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று முடிவெடுத்தது தமிழக அரசு. இதனை தொடர்ந்து ஆந்திர அரசும் இந்த முடிவை எடுத்திருக்கிறது. நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்படுவார் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது. அதன்படி அல்லு அர்ஜுன் வருகைக்கு முன்பே அந்த பெண் மரணம் அடைந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக சொன்னால் அல்லு அர்ஜுன் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே அந்த பெண் மரணம் அடைந்திருக்கிறார்.
அப்படி இருக்கும் பொழுது அல்லு அர்ஜுனனை கைது செய்வது அவருடைய பவுன்சரை கைது செய்வது என ஆந்திர காவல்துறை மும்முரம் காட்டி வருகிறது. இது அல்லு அர்ஜுன் மீது இருக்கக்கூடிய ஏதோ தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்வது போல தெரிகிறது.
ஒரு நடிகராக தான் நடித்த ஒரு படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருக்கிறார் அல்லு அர்ஜுன். அனைத்து திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றாலும் அல்லு அர்ஜுன் வருகிறார்.. அங்கே கூட்டம் கூடும் என்பதை தெரிந்து இருக்கும் ஆந்திர போலீசார் அந்த குறிப்பிட்ட திரையுங்களுக்காவது தங்களுடைய முழு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்.
இங்கே அல்லு அர்ஜுன் மீது தவறு இருக்கிறது என்றால் அதே அளவுக்கு தவறு காவல்துறையினர் மீதும் இருக்கிறது. நாங்கள் அல்லு அர்ஜுனிடம் சொன்னோம் அவர்தான் எங்களுடைய பேச்சை மதிக்காமல் வந்து விட்டார் என்று காவல்துறையினர் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவான குரல்களும் என தொடங்கி இருக்கின்றன.
ஒரு நடிகராக கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த ஒரு பெண்ணுக்கு எப்படி அல்லு அர்ஜுன் பொறுப்பாக முடியும். அவருடைய பவுன்சர் எப்படி இதற்கு பொறுப்பாவார்..? என்ற விவாதங்கள் கிளம்பி இருக்கின்றன.
இந்நிலையில், அந்த இளம் பெண் இறந்த நேரம் தற்போது விவாத பொருளாக மாறி இருக்கிறது. அல்லு அர்ஜுன் வருவதற்கு முன்பே அந்த பெண் இறந்திருக்கிறார். கூட்ட நெரிசலில் சிக்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அந்தப் பெண் இறந்த நேரத்தை மறைத்து சிசிடிவி காட்சிகளை ஆந்திர போலீசார் வெளியிட்டு இருக்கிறார்கள்.. இதனுடைய நோக்கம் என்ன..? என்ற கேள்விகளும் எழும்பி வருகின்றன.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.