சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான திரு.துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவரிடம், விஜய், அஜித் படங்கள் எல்லாம் பார்ப்பீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விஜய் தெரியும்.. அஜித்-னா யாரு..? என்ற கேள்வியை எழுப்பினார்.
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியில் நடிகர் அஜித் திமுக-வினர் விழாவில் கலந்து கொள்ள சொல்லி மிரட்டுகிறார்கள். நாங்கள் சாதாரண நடிகர்கள். நாங்கள் களைத்து போய் இருக்கிறோம்.
எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று அப்போது முதல்வராக இருந்த திரு.மு.கருணாநிதி முன்னிலையிலேயே பேசினார். இந்த பேச்சு அப்போது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அஜித்தின் இந்த அதிரடி பேச்சை ஆமோதிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார்.
அந்த தேர்தலில் வீழ்ந்த திமுக பத்து ஆண்டுகளாக ஆட்சி கட்டிலை இழந்தது. தற்போது தான் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. தலைவர் மு.கருணாநிதி முன்பு அப்படி பேசிய அஜித்-தின் மீது இன்னமும் தீராத கோபத்துடன் இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
அதனால் தான், அஜித்-னா யாரு..? என கலாய்ப்பது போல கேட்கிறார் என்றும் இணைய வாசிகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து #ஐயோஅம்மா_கொல்றாங்க என்ற டேக்-கை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.
ஆனால், அந்த ஹேஸ்டேக் தற்போது உலக அளவில் ட்ரெண்ட் லிஸ்டில் நுழைந்துள்ளது. இதனால், இந்த விவகாரம் இணைய பக்கங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.