கவர்ச்சி காட்டியும் நோ யூஸ்.. படவாய்ப்பு கிடைக்காமல் புலம்பும் நந்திதா ஸ்வேதா

post-img

தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

 

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார்.

 

நடிகை நந்திதா ஸ்வேதா: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும். இதையடுத்து, விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அடுத்தடுத்த படங்களில்: எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா ஆகிய படங்களிலும், தளபதியின் புலி படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். சிறிது நேரமே அந்த கதாபாத்திரம் வந்தாலும் அந்த கதாபாத்திரம் நின்னு பேசும் அளவுக்கு இருந்தது.

மார்டன் உடையில்: சமூக ஊடகங்களில் ஏராளமான கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நந்திதா ஸ்வேதா, தற்போது மார்டன் உடையில் க்யூட்டான ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ரசிகர்கள் சிலர் இப்படி எல்லாம் ரீல்ஸ் போட்டால் மட்டும் படவாய்ப்பு வருமா என கேட்டு வருகின்றனர்.

கவர்ச்சி ரூட்: தமிழில் அறிமுகமாகும்போது பெரும்பான்மையான நடிகைகள் முதலில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர பல்வேறு கவர்ச்சிக்குறிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவது வழக்கம். தற்போது நந்தித்தாவும் பட வாய்ப்புக்காக கொஞ்சம் ரூட்டு மாறியிருக்கிறார்.

Related Post