ஸ்ரீதிவ்யாவுக்கு என்ன ஆச்சு..? அவரது தற்போதைய நிலை இது தான்..! பயில்வான் வெளியிட்ட பகீர் தகவல்..!

post-img


நடிகை ஸ்ரீ திவ்யா தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். இவர் 10க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
சினிமாவில் மட்டுமின்றி துவக்கத்தில் டிவி சீரியல்களில் நடித்த அனுபவமும் ஸ்ரீ திவ்யாவுக்கு இருக்கிறது.


கடந்த 2010ம் ஆண்டில் ரவிபாபு இயக்கிய மனசார தெலுங்கு படத்தில் நடித்து ஸ்ரீ திவ்யா அறிமுகமானார். இந்த படம் தோல்வியடைந்தது.


இதற்கு பின் 2012ம் ஆண்டில் மாருதி என்பவர் இயக்கிய பஸ் ஸ்டாப் என்ற படம், ஸ்ரீதிவ்யாவுக்கு மிகப் பெரிய வெற்றியை தந்தது.

 

தமிழில் ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் காக்கிச்சட்டை ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து பென்சில், ஜீவா, வெள்ளக்கார துரை, மருது உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஸ்ரீ திவ்யா..
சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ், விஷ்ணு விஷால், விக்ரம் பிரபு, மருது போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தும் ஸ்ரீ திவ்யா, தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற முடியவில்லை.
தொடர் தோல்வி..
இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறுகையில், ஸ்ரீ திவ்யா குடும்பப்பாங்கான தோற்றத்தில் சில படங்களில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் இரண்டு படங்கள் நடித்தார்.


சினிமாவில் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றால்தான் அடுத்த படத்தில் நடிக்க கேட்டு வருவார். இல்லை என்றால் பக்கத்தில் கூட வரமாட்டார்கள்.
ஸ்ரீ திவ்யா நடித்த படங்கள் தொடர் தோல்வி படங்களாக டக் அவுட் படங்களாக இருந்தது. அதனால் ஸ்ரீ திவ்யா இப்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கிறார்.
மார்க்கெட் இல்லாவிட்டால், உடனடியாக நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்.
இல்லேன்னா, கோடீஸ்வர தொழிலதிபரா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும். ஆனா அவருக்கு அதுக்கு பொறுப்பு இல்லே.
மீண்டும் முன்னணி நடிகையா ஆனாத்தான் திருமணத்தை பத்தி யோசிப்பேன்னு சொல்லியிருக்காங்க.
அவர் எண்ணம் ஈடேற காலம் அவருக்கு கை கொடுக்கட்டும், என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
தொடர் தோல்விகளால் பட வாய்ப்புகளில் இன்றி சும்மா இருக்கிறார். அதுதான் ஸ்ரீ திவ்யாவின் தற்போதைய நிலையாக இருப்பதாக, பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

 

 

Related Post