தமிழ் சீரியல்களில் பெரும்பாலும் தமிழ் நடிகைகள் நடித்தாலும், முக்கிய வேடங்களில் வேற்று மொழி பேசுபவர்களே அதிகமாக நடிக்கிறார்கள். இவர்கள் தமிழ் கற்று நடிப்பதற்கு பதிலாக அவர்களுக்கென்று டப்பிங் கொடுக்க டப்பிங் ஆர்டிஸ்ட்கள் இருக்கிறார்கள்.
Courtesy: Instagram
ஈரமான ரோஜாவே 2 சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்வாதி கொண்டே. கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட ஸ்வாதி, கன்னட திரைப்படங்களின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர். கன்னடத்தில் சுமார் 4 திரைப்படங்களில் ஸ்வாதி கலக்கியுள்ளார்.
Courtesy: Instagram
திரைப்படங்களில் ஸ்வாதிக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் அதே கன்னட சினிமாவில் 'யாரிவலு' என்கிற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தவர். கன்னட சின்னத்திரையில் கலக்கிய ஸ்வாதி பின்னர் தமிழ் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
Courtesy: Instagram
இவரது கதாபாத்திரத்திற்கென்றே தனி ரசிகர் கூட்டத்தை கொண்டார். இவருக்கு பூர்விகம் கன்னடம் என்பதால் இவருக்கு தமிழில் டப்பிங் செய்து வந்தவர் மீனா லோச்சனி என்பவர். இவர் ஸ்வாதிக்கு மட்டும் இல்லாமல் இன்னும் பல சீரியல் நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.
Courtesy: Instagram
இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஸ்வாதி கொண்டே 'பிரியா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ப்ரியாவுக்கு அவரின் வாய்ஸ் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். மீனா, பாரதி கண்ணம்மாவில், கண்ணம்மாவுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.
Courtesy: Instagram
இந்த சீரியலில் ஜீவா, பிரியா கேரக்டர்களுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது இந்த தொடரில் பிரியாவின் வாய்ஸ் மாறியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தார்கள். சீரியல் குழுவுக்கும் மாற்றுங்கள் , எங்களுக்கு பழைய ப்ரியாவின் வாய்ஸ் தன வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Courtesy: Instagram
மீனா லோச்சனி டப்பிங் பண்ணாத ஆர்டிஸ்ட்களே இல்லை என்றெய் கூறலாம். மௌன ராகம் 2 சீரியலில் , இவரது அம்மா, பொண்ணு என மூன்று பெரும் டப்பிங் கொடுத்துள்ளார்கள். பாண்டியன் ஸ்டார்ஸில் மீனா கதாபாத்திரத்திற்கு என இவரது குரல் பட்டி தொட்டி எங்கும் ஒளித்து கொண்டிருக்கிறது. இவரை திருமா பிரியாவிருக்கு குரல் கொடுக்கும்படி ரசிகர்கள் அவரது இன்ஸ்டாவில் கமெண்ட் செய்து வருகிறார்கள்