லியோ படத்தில் நடித்துவரும் விஜய் அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் தற்போது பங்கேற்றுள்ளார். சமீபத்தில் 2000 டான்ஸர்களுடன் அவர் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டது.படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.முதன்முதலாக வெளியிடப்பட்ட க்ளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் ஹிட்டடித்ததாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள்: இதனையடுத்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ஆம் தேதி லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், நா ரெடிதா என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது. இரண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் முதல் சிங்கிளின் வரிகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் வலுத்தன. மேலும் வாயில் சிகரெட்டுடனும், வரிகளில் போதையுடனும் ஆடும் விஜய் அரசியலுக்கு ஏன் வரவேண்டும் எனவும் கேள்வி முன்வைக்கப்பட்டது.
விஜய் கல்வி விருது வழங்கும் விழா: இதற்கிடையே 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்திக்க முடிவு செய்திருந்தார். அதன்படி கடந்த 17ஆம் தேதி நீலாங்கரையில் வைத்து அவர்களையும், அவர்களது பெற்றோரையும் சந்தித்து மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து சான்றிதழையும், ஊக்கத்தொகையையும் வழங்கினார்.
செம ட்ரெண்ட்: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசளித்தார்.தொடர்ந்து பேசிய அவர், "குணத்தை இழந்தால் அனைத்தையுமே இழந்த மாதிரி. இதற்கு பிறகு நீங்கள் வெவ்வேறு ஊர்களுக்கு, பள்ளிகளுக்கு செல்லலாம். ஹாஸ்டலில் தங்கி படிக்கும் சூழல் உருவாகலாம். அப்போது ஒரு சுதந்திரம் கிடைக்கும். அந்த சுதந்திரத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பணம் வாங்காமல் வாக்கு அளியுங்கள். அப்படி வாக்கு அளிக்க சொல்லி உங்களது பெற்றோரிடமும் வலியுறுத்துங்கள். புத்தக படிப்பு மட்டும் இல்லாமல் பெரியார்,அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை படியுங்கள்" என்றார்.
அரசியல் அவதாரம்: இதனையடுத்து ஏற்கனவே அரசியல் ஆசையில் இருக்கும் விஜய் தனது அரசியல் வருகையை அந்த சந்திப்பின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் மாணவ, மாணவிகளிடமிருந்து தனது அரசியல் அவதாரத்தை ஆரம்பித்திருக்க வேண்டாம் என்ற விமர்சனம் ஒருபக்கம் வைக்கப்படுகிறது. இந்தச் சூழலில் விஜய் புதிய அவதாரம் எடுக்கப்போவதாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
விஜய்யின் புதிய அவதாரம்: இதுகுறித்து அவர் பேசுகையில், "விஜய்க்கு 500 கோடி ரூபாய் அளவில் சொத்து இருக்கிறது. தனது தாய், மனைவி, மகன் ஆகிய மூன்று பேர் பெயரில் திருமண மண்டபங்கள் இருக்கின்றன. அவர் விரைவில் தயாரிப்பாளராக மாறப்போகிறார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களை தயாரிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார்" என்றார்.