இந்தியளவில் ரசிகர்களை கவர்ந்த நாகினி தொடரின் 4வது சீசனில் நாகினியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நியா ஷர்மா.
பிக் பாஸ் இந்தி உள்ளிட்ட ஏகப்பட்ட ரியாலிட்டி டிவி தொடர்களில் கலந்து கொண்டு கலக்கி வரும் நியா ஷர்மா இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார்.
டிவி நடிகை:
இந்தி சீரியல்களில் நடித்து வந்த நியா ஷர்மா மெளனி ராய் நடித்து பிரபலமான நாகினி சீரியலின் 4வது சீசனில் நடித்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்தார். 2020ல் ஒளிபரப்பான கத்ரோன் கே கில்லாடி மேட் இன் இந்தியா ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வின்னர் ஆனவர் நியா ஷர்மா.
கடல் நுரையே பிகினியா:
படுபோல்டான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு வெளியே சுற்றுவதும், விருது விழாக்களுக்கு செல்வதுமாக இருந்து வரும் நாகினி நடிகை நியா ஷர்மா தற்போது நடத்திய போட்டோஷூட் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.
பீச்சில் கடல் அருகே வெள்ளை நிற மோனோகினியை அணிந்து கொண்டு நின்றபடி போஸ் கொடுத்துள்ளார் நியா ஷர்மா. அவரது உடையையும் அந்த புகைப்படத்தையும் பார்த்த ரசிகர்கள் பின்னாடி தெரிகிற கடல் நுரையையே பிகினியாக மாற்றி விட்டாரா நியா ஷர்மா என கமெண்ட் போட்டு அவரது ஹாட்னஸை வர்ணித்து வருகின்றனர்.
மோனோகினி மோகினி:
நாகினி நடிகை மோனோகினியை அணிந்துக் கொண்டு எல்லையை மீறிய கவர்ச்சியை காட்டி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்துள்ள நிலையில், லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் மோனோகினி மோகினி என்றும் செம செக்ஸி லேடி என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றன.