அதனை முன்னிட்டு அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
33 வயதான நிலையில், இன்னமும் திருமணம் செய்யாமல் தான் இருப்பதாக குறிப்பிட்ட ஜெனிஃபர் அதற்காக போட்டுள்ள பதிவு தான் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது.
கில்லி அரிசிமூட்டையை மறக்க முடியுமா?: தரணி இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான கில்லி படத்தில் நடிகர் விஜய்யின் தங்கை புவனாவாக நடித்திருப்பார் நடிகை நான்ஸி ஜெனிஃபர்.
கிழக்குகரை, இதுதான் டா சட்டம், தாயகம், சக்தி, நேருக்கு நேர், உளவுத்துறை, சந்திப்போமா, கண்மணி உனக்காக, டைம், கில்லி, பிப்ரவரி 14, உனக்கும் எனக்கும், தோழா, தீயா வேலை செய்யணும் குமாரு, கூட்டத்தில் ஒருவன், ட்ரிப், மஹா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தாலும், கில்லி படத்தில் ஹேய் அரிசி மூட்டை இங்க வாயேன்னு விஜய் கூப்பிடுற அந்த புவனா கதாபாத்திரத்தை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள்.
புவனா ஒரு கேள்விக்குறி: ஏம்மா புவனா எப்பவுமே ஒரு கேள்விக்குறியாவே இருக்கா என சரவண வேலுவாக விஜய் கில்லி படத்தில் கூறியிருப்பார். அதே போலத்தான் ஜெனிஃபரின் லேட்டஸ்ட் போஸ்ட்டும் ரசிகர்கள் மனதில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி உள்ளது.
சினிமாவைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் ஏகப்பட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார். ஜன்னல், தாயுமானவன், வள்ளி, இதயத்தை திருடாதே மற்றும் சித்தி 2 என பல தொடர்களில் நடித்து அசத்தி வரும் இவர் மேக்கப் துறையிலும் அசத்தி வருகிறார்.
33வது பிறந்தநாள்: 1990ல் பிறந்த பக்கா 90ஸ் கிட் ஆன ஜெனிஃபர் நேற்று தனது 33வது பிறந்தநாளை தனிமையிலேயே இனிமை காண முடியும் என தன்னந்தனியாக கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த வீடியோவைல் அவர் சொன்ன மெசேஜ் தான் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
https://www.instagram.com/reel/CraF2swx2tv/?utm_source=ig_web_button_share_sheet
திருமணம் ஆகல, குழந்தை பிறக்கல: எனக்கு 33 வயசாகுது, இன்னமும் திருமணம் ஆகல, குழந்தையும் இல்லை, சொந்தமா வீடு கூட இல்லை. அதெல்லாம் என் பிரச்சனை. அதைப்பத்தி கேள்விக் கேட்கிறவங்களுக்கு இதுதான் பதில் என கெட்ட வார்த்தையில் திட்டுவதை போல டாஷ் டாஷ் என சிம்பிள்களை போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த உலகத்திலேயே என்னைப் போன்ற ஒருத்தி நான் மட்டும் தான். நான் ஹேப்பியாத்தான் இருக்கேன். ஹேப்பியாத்தான் இருப்பேன் என பதிவிட்டு தனது ஹேட்டர்களுக்கு பதில் அளித்துள்ளார் ஜெனிஃபர்.