விஜய் பிறந்தநாள்..லோகேஷ் கனகராஜ் வைத்த ட்ரீட்-வெளியானது லியோ ஃபர்ஸ்ட் லுக்

post-img

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் நடித்துவருகிறார். படத்தின் அறிவிப்பு வெளியானபோதே விஜய்யும்,லோகேஷும் இணைந்து மாஸ்டரில் எப்படி தரமான சம்பவம் செய்தார்களோ அதேபோல் லியோவிலும் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக லியோ படத்தின் அறிவிப்பு க்ளிம்ப்ஸ் அமைந்திருந்தது. படத்துக்க் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

வெறித்தனமான பிஸ்னெஸ்: குறிப்பாக விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதாலும் படத்தின் மீதான ஆவல் அதிகரித்திருந்தது. எனவே படத்தின் பிஸ்னெஸ்ஸும் ஷூட்டிங் முடிவதற்குள்ளாகவே 400 கோடி ரூபாய்க்கும் மேல் சென்றுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது லியோவின் இறுதிக்கட்ட ஷூட்டிங் ஆதித்யராம் ஸ்டூடியோவில் நடந்துவருகிறது.
Leo Movie First Look Was out Now

முதல் சிங்கிள்: இந்தச் சூழலில் விஜய் தனது 49ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி நா ரெடி என்ற லியோவின் முதல் சிங்கிள் வெளியாகும் என அறிவித்து அதற்கான ப்ரோமோவும் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. மேலும் பாடலுக்கான அறிவிப்பு போஸ்டரில் விஜய் ரொம்பவே இளமையாக காட்சியளித்தார். அதுகுறித்து பேசியிருந்த தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் பாடலில் பத்து வருடங்களுக்கு முன்னதாக விஜய் எப்படி இருந்தாரோ அப்படிப்பட்ட லுக்கில் இருப்பார் என அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.

ஃபர்ஸ்ட் லுக்: இதற்கிடையே சமீபத்தில் பேட்டி அளித்திருந்த லோகேஷ் கனகராஜ், விஜய் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு முழு நாளும் ட்ரீட் இருக்கிறது என தெரிவித்திருந்தார். எனவே ஃபர்ஸ்ட் சிங்கிளை தாண்டி நிச்சயம் வேறு ஏதேனும் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் கணித்துவந்தனர். அவர்களது கணிப்பை பொய்யாக்காத விதம் ஜூன் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

லோகேஷின் ட்ரீட்: அதன்படி லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் விஜய், ரத்தம் தெறிக்க தெறிக்க கையில் பெரிய சுத்தியலோடு இருக்கிறார். மேலும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடக்கப்படாத நதிகளின் உலகில் அமைதியான நீர் தெய்வீக கடவுள்களாக அல்லது பயங்கரமான பேய்களாக மாறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை பார்ப்பதற்கு 12 மணிக்கு அலாரம் வைத்து காத்திருந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஃபர்ஸ்ட் லுக்கை வெறித்தனமாக ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

கதை என்ன?: முன்னதாக லியோ படத்தின் கதை என்ன என்பது குறித்து பலரும் பல விஷயங்களை கூறிவந்தனர். குறிப்பாக ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டரில் ஆல்டர் ஈகோ என்ற வாசகம் இருந்ததை அடுத்து, ஒரு விஷயத்தை செய்துவிட்டு ஒருவர் தனது அடையாளத்தை மறைத்து வேறு ஒருவராக வாழ்வதுதான் ஆல்டர் ஈகோவின் அர்த்தம். எனவே விஜய் ஒரு விஷயத்தை செய்துவிட்டுதனது அடையாளத்தை மறைத்து வேறு ஒருவராக வாழ்வார். அதை மையப்படுத்தி நடப்பதுதான் லியோ கதை என ரசிகர்கள் உறுதியாக கூறிவருகின்றனர்.

Related Post