பல படங்களில் நடித்திருந்தாலும், அதில் கிளாமர் ரோல்களை மட்டுமே, ஸ்ருதி அதிகமாக செய்திருக்கிறார். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும், அப்படி ஒன்றும் சிறப்பான நடிப்பை ஸ்ருதி தரவில்லையே, என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. ஆனால், அப்பாவை மிஞ்சும் மகளாக காதல் விவகாரங்களில், ஸ்ருதி பின்னி பெடல் எடுத்து வருகிறார். இப்போது, புதிய விவகாரம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்து, வைரலாகி வருகிறது.
பாய்ஸ் படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சித்தார்த். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர், இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக சூர்யா, மாதவன் ஆகியோருடன் சித்தார்த்தும் நடித்திருந்தார். இந்த படம் மூலம் சித்தார்த், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும், சித்தார்த் நடிக்கிறார். தமிழில் ஜிகர்தண்டா, காதலில் சொதப்புவது எப்படி, அருவம், அரண்மனை 2 படங்கள், சித்தார்த் நடிப்பில் வெற்றிப்படங்களாக அமைந்தன.
தெலுங்கு படம் ஒன்றில் நடித்த போது சித்தார்த் – ஸ்ருதிஹாசன் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் லிவிங் டூ ரிலேஷன்ஷிப் என்ற முறையில், திருமணம் செய்யாமலேயே ஐதராபாத்தில் ஒன்றாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சித்தார்த் – ஸ்ருதி உறவில் விரிசலை ஏற்படுத்தியது நடிகர் சூர்யா என்ற புதிய விவகாரம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில், சூர்யாவுடன் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தார்.
அப்போது, நெருக்கமான சில காட்சிகளில் இருவரும் நடித்ததாகவும், சூர்யாவுடன் ஸ்ருதி அவுட்டிங் சென்றதாகவும், இதுகுறித்து சித்தார்த் கேட்டதால், ஸ்ருதி சித்தார்த் ஐ விட்டு விலகியதாகவும் தற்போது தகவல் பரவி வருகிறது. அதாவது, சித்தார்த்தை ஸ்ருதி, பிரேக்கப் செய்ய, சூர்யாதான் காரணம் என, யாரோ கொளுத்திப்போட்டது, தீயாக பரவி வருகிறது.
ஆனால், 3 படத்தில், தனுஷ் உடன் ஸ்ருதி நடித்த காட்சிகளை பார்த்திருந்தால், சித்தார்த் என்ன செய்திருப்பார் என்றும், ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..கடந்த 2002ம் ஆண்டில் சித்தார்த், பின்னணி பாடகி மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், 2007ம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்து விட்டார்.
இதன் பிறகு, ஸ்ருதிஹாசனைக் காதலித்துள்ளார். அவரை பிரிந்த பின்பு, சமந்தாவைக் காதலிப்பதாகவும் ஒரு தகவல் பரவியது.இதையடுத்து, சைக்கோ மற்றும் காற்று வெளியிடை’ படங்களில் நடித்த நடிகை அதிதி ராவை, சித்தார்த் காதலிப்பதாகவும், இருவரும் மும்பையில், திருமணம் செய்துகொள்ளாமலேயே ‘ லிவ் இன் ரிலேஷன்ஷிப்’பில் ஒன்றாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
‘இந்த விஷயத்தில், என் அப்பா என்னை நெருங்கவே முடியாது, அப்பாவை மிஞ்சிய மகள் நான்தான்,’ என்கிற வகையில் ஸ்ருதிஹாசனும் தன் காதலர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார். காதல் விவகாரங்களில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். தன் காதலருடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, அது அடிக்கடி வைரலாகி வருகிறது.