நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் மும்பையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகின.
அதனை தொடர்ந்து, நடிகர் சூர்யா மும்பையில் செட்டிலாகி விட்டார் என்றும் கூறப்பட்டது. அதனை நிருபிக்கும் விதமாக நடிகர் சூர்யா மும்பையில் சில வாரங்கள் தங்கியிருந்தார்.
இந்த தகவல்களை தொடர்ந்து, கூட்டுக்குடும்பமாக இருந்த சூர்யா தற்போது தனிக்குடித்தனம் போயிட்டாராம்.. என்று கிளப்பி விட்டனர் சில இணைய ஆசாமிகள்.
சுதாரித்துக்கொண்ட நடிகர் சூர்யா.. யப்பா.. என் புள்ளைங்க மும்பையில் படிக்குது.. அவங்களை பார்க்க தான் அடிக்கடி மும்பைக்கு போயிட்டு வந்துட்டு இருக்கேன்.. என ஆவேசமாக கூறியுள்ளார்.
சமீபத்தில், ஹிந்தி வேண்டாம் போடா.. என்ன ம**க்கு புதிய கல்வி கொள்கை… என்றெல்லாம் பேசியவர் நடிகர் சூரியா.
ஆனால், தற்போது தன்னுடைய குழந்தைகளை மட்டும் ஹிந்தி பேசும் ஊரில்.. புதிய கல்வி கொள்கையை பின் தொடரும் பள்ளியில் சேர்த்து விட்டுள்ளார்.. என்ன சூரியா இதெல்லாம் என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர் ஒரு தரப்பு இணைய வாசிகள்.