இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், வடிவேலு, பகத் பாசில் கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார், ரவீனா ரவி, கீதா கைலாசம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மாமன்னன் படத்தின் முதல் காட்சியை பார்த்த பொதுமக்களின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கிழிகிழினு கிழிச்சிட்டாரு: மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் தெறிக்கவிட்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். உதயநிதி, வடிவேலு,பகத் பாசில் என அனைவரும் நடிப்பில் மிரட்டி விட்டனர். வடிவேலு வழக்கமா நாம் திரையில் பார்த்ததுபோல இல்லாமல் வேறமாதிரி இருக்கிறார். பகத் பாசிலின் நடிப்பு அல்டிமேட். ஒவ்வொரு காட்சியையும் சும்மா கிழிகிழினு கிழிச்சிட்டாரு. உதயநிதி ஸ்டாலின் கேரியரில் பெஸ்ட் படம் இதுதான். ஆனால், உதயநிதியின் கடைசி படம் என்று சொல்லும் போதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு என்றார். இந்த படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்றார்.
இதுவரை பார்க்காத வடிவேலு: படம் பார்த்த மற்றொரு ரசிகர், வழக்கமாக மாரி செல்வராஜின் படம் எப்படி இருக்குமோ அப்படித்தான் சாதி அரசியலை வைத்து படத்தை எடுத்து இருக்கிறார். ஆனால் சில விஷயத்தை வித்தியாசமாக சொல்லி இருப்பது பாராட்டக்கூடிய ஒன்று. அதேபோல, இதுவரை திரையில் பார்க்காத ஒரு வடிவேலுவை இத்திரைப்படத்தில் பார்க்கலாம்.
சாதி அரசியல் தான் படமே: மாமன்னன் வித்தியாசமான படமாக இருக்கிறது. சாதி அரசியலை பேசுவதுதான் படமே. ஒரு சாதியை உயர்த்தி பேசுவது, ஒரு சாதியை எப்படி தாழ்த்தப்படுகிறது என்பதை சினிமாவில் இருந்து தெரிந்து கொண்டு, அதை எவ்வாறு ஒழுங்குப்படுத்தி வாழவேண்டும் என்பதை இந்த படத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதை மாரி செல்வராஜ் அழகாக சொல்லி இருக்கிறார்.
கூடுதல் பலம்: படம் பார்த்துவிட்டு வந்த பெண் ரசிகை ஒருவர் படம் ரொம்ப நல்லா இருக்கு, இதுவரை நம்மை சிரிக்க வைத்த வடிவேலு இந்த படத்தில் அழவைத்துவிட்டார். அனைவரின் நடிப்பும் சூப்பர். ஏஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது என்றார்.