இணையத்தை கலக்கும் 'ஜெயிலர்' பட இயக்குநரின் குடும்ப புகைப்படங்கள்!

post-img
 
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் நெல்சன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளுக்கு இயக்குநராக பணியாற்றய நெல்சன் பின்னர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் 'கோலமாவு கோகிலா' என்ற திரைப்படத்தை இயக்கி வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படம் வெற்றி படமாக அமையுமா என்று எதிர்பார்த்த நெல்சனுக்கு இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
Courtesy: instagram
PHOTOS: நெல்சனின் மனைவி இவர்தானா? இணையத்தை கலக்கும் 'ஜெயிலர்' பட இயக்குநரின் குடும்ப புகைப்படங்கள்!
 
தனது முதல் படத்திலேயே சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை "யாருப்பா நீ" என்று அனைவரையும் திரும்பி பார்க்கவைத்த நெல்சனுக்கு தொடர்ந்து படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது.  கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து இரண்டாவது படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்தார். 
Courtesy: instagram
PHOTOS: நெல்சனின் மனைவி இவர்தானா? இணையத்தை கலக்கும் 'ஜெயிலர்' பட இயக்குநரின் குடும்ப புகைப்படங்கள்!
 
நடிகர் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து 'டாக்டர்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் காமெடி கலந்த க்ரைம் திரைப்படமாக வெளியாகி செம ஹிட்டானது. நயன்தாரா படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தையும் வெற்றி படமாக கொடுத்த நெல்சனுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
Courtesy: instagram
PHOTOS: நெல்சனின் மனைவி இவர்தானா? இணையத்தை கலக்கும் 'ஜெயிலர்' பட இயக்குநரின் குடும்ப புகைப்படங்கள்!
 
இரண்டு வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் தொடர்ந்து மூன்றாவது படமாக நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். ஏற்கனவே ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த நெல்சன் இம்முறை விஜய்யுடன் கூட்டணி அமைப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. 
Courtesy: instagram
PHOTOS: நெல்சனின் மனைவி இவர்தானா? இணையத்தை கலக்கும் 'ஜெயிலர்' பட இயக்குநரின் குடும்ப புகைப்படங்கள்!
 
விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியானது. ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் எதிர்பார்க்காத விதமாக மிக பெரிய தோல்வி படமாக அமைத்து. வசூலில் சாதனை படைத்த இப்படம் விமர்சனம் ரீதியாக படுதோல்வி அடைத்தது. 
Courtesy: instagram
PHOTOS: நெல்சனின் மனைவி இவர்தானா? இணையத்தை கலக்கும் 'ஜெயிலர்' பட இயக்குநரின் குடும்ப புகைப்படங்கள்!
 
இதனால் இயக்குநர் நெல்சனை சுற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் அலையலையாய் வர தொடங்கின. அவ்வளவு தான் இனி நெல்சனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காது, டாப் நடிகர்கள் யாரும் நெல்சனுடன் நடிக்க விரும்ப மாட்டார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் உலா வர தொடங்கின. 
Courtesy: instagram
PHOTOS: நெல்சனின் மனைவி இவர்தானா? இணையத்தை கலக்கும் 'ஜெயிலர்' பட இயக்குநரின் குடும்ப புகைப்படங்கள்!
 
ஏகப்பட்ட நெகடிவ் கமெண்டுகள் சுற்றி வர நெல்சன் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். 
Courtesy: instagram
PHOTOS: நெல்சனின் மனைவி இவர்தானா? இணையத்தை கலக்கும் 'ஜெயிலர்' பட இயக்குநரின் குடும்ப புகைப்படங்கள்!
 
தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்படம் இயக்குநர் நெல்சனுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்சனின் மனைவி மோனிஷாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நெல்சனை விட இவரின் மனைவி மோனிஷா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். நெல்சனின் குடும்பத்தை பார்த்திடாத ரசிகர்கள் "ஓஹோ" இவங்கதான் உங்க மனைவியா! என்று நெல்சனின் குடும்ப புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர். 
Courtesy: instagram

Related Post