கடந்த 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நதியா. தமிழில் அறிமுகமாவதற்கு முன் மலையாளத்தில் ஏற்கனவே கால்பதித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
80 மற்றும் 90-களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை நதியாவுக்கு தமிழ் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனால் மலையாளத்தில் அறிமுகமாகியிருந்தாலும் தமிழில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருந்த விஜயகாந்த், பிரபு, ரஜினி, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் நதியா குணச்சித்திர நடிகையாக மக்களின் மனதை கொள்ளையடித்தார்.
50 அல்லது அதற்கும் மேல் வயதாகும் நடிகைகள் ஒரு கலக்கடத்தற்கு பின் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்வது, அம்மா, சித்தி கதாபாத்திரத்தில் நடிப்பது இல்லையென்றால் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பது என்று தங்களின் சினிமா பாதையை மாற்றிக்கொள்ளுவார்கள்.