விஜய்யின் அடுத்த மூவ்.. நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு.. வெளியான புது தகவல் !

post-img

சென்னையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு போட்டோ சூட் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

அவ்வாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கம் சார்ப்பில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசை வழங்கினார் நடிகர் விஜய். விஜயின் இந்த பாராட்டு விழா அரசியல் வட்டாரங்களில் கவனிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Post