தெய்வ மச்சான் விமர்சனம்: சுவாரஸ்ய ஒன்லைன், ஆனால் டெம்ப்ளேட் காட்சிகள்

post-img
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார் `தபால்' கார்த்தி. அவரின் தங்கையான குங்குமத்தேனுக்குக் கல்யாண வரன் வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போகிறது. இறுதியாக, தங்கைக்குப் பிடித்த சம்பந்தம் அமைய, அண்ணன் `தபால்' கார்த்தியும் குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைக்கிறார்கள். மறுபுறம், கார்த்தியின் கனவில் வரும் `சாட்டைக்காரன்', அடுத்து மரணிக்கப் போகிறவர்களின் பெயர்களைச் சொல்ல, அதன்படியே மரணங்கள் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில், தங்கையின் கணவனும் இறக்கப் போவதாகச் சொல்கிறார் சாட்டைக்காரன். செய்வதறியாது உடைந்துபோகிறார் கார்த்தி. தன் தங்கையின் கணவனான மச்சானை மரணத்திலிருந்து காப்பாற்றினாரா, அந்தக் கனவுகளுக்குக் காரணம் என்ன என்பதைக் கலகலப்பான கிராமத்துக் கல்யாண வீட்டைக் கதைக்களமாகக் கொண்டு சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார்.
 
 
தெய்வ மச்சான்
 
தெய்வ மச்சான்

விமலுக்குக் கைவந்த 'கிராமத்துச் சாமானிய இளைஞன்' கதாபாத்திரத்தில் அழகாகப் பொருந்திப்போகிறார். அதேநேரம், புதுமைகள் இல்லாத பார்த்துப் பழகிய கதாபாத்திரம் என்பதாலும், மொத்தப் படத்தையும் தாங்க வேண்டிய பொறுப்புகொண்ட கதாபாத்திரம் என்பதாலும், நடிப்பில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். அது சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கதாநாயகியாக நேஹா ஜா, மூன்று காட்சிகளில் மட்டும் முகம் காட்டுகிறார். பின் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்டாக மாறிவிடுகிறார். தங்கை குங்குமத்தேனாக வரும் அனிதா சம்பத், தன் கிராமத்துத் தோற்றத்தாலும், எள்ளலான பேச்சாலும் கவனம் ஈர்க்கிறார். படத்தில் இது முக்கியமான கதாபாத்திரம்தான் என்றாலும், இன்னும் அழுத்தமான காட்சிகளால், அண்ணன் - தங்கை பாசத்திற்கு வலுசேர்த்திருக்கலாம்.

 

பால சரவணனின் ஒன்லைன் காமெடிகள் சில இடங்களில் சொதப்பினாலும், மற்ற இடங்களில் சிரிப்புப் பட்டாசு கொளுத்துகிறது. வெகுளியான, வில்லங்கமான கதாபாத்திரத்தில் தீபா, தன் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். பாண்டியராஜன், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், 'கிச்சா' ரவி ஆகியோரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். கலகலப்பான படத்திற்குப் பாண்டியராஜனின் அப்பாவித்தனத்தையும் சேட்டைகளையும் பயன்படுத்தத் தவறியிருக்கிறார் இயக்குநர். மச்சானாக வரும் வத்சன் வீரமணி, தன் பணியைக் குறைவின்றி செய்திருக்கிறார்.

விமல் - தெய்வ மச்சான்
 
விமல் - தெய்வ மச்சான்

காட்வின் ஜெ.கோடனின் பாடல்கள் மனதில் பதியவில்லை. பின்னணி இசையில் படத்திற்கு ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அஜீஸ். அய்யம்பாளையத்தின் எழிலை தன் கேமராவில் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கேமில் ஜெ. அலெக்ஸ். ஒரு காமெடி படத்துக்குத் தேவையான பணியைப் படத்தொகுப்பாளர் எஸ்.இளையராஜா செய்திருக்கி

Related Post