சென்னையில் சில நாட்கள் மழை பெய்தாலும் இன்னும் கோடை வெப்பம் குறையவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யாவாக நடித்த சாய் காயத்திரி இந்த வெயில் தாக்கத்தை குறைக்க புது இடத்திற்கு சென்றுள்ளார்.
Courtesy: Instagram
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்களில் சாய் காயத்ரி நடிகையாக அறிமுகம் ஆனார். இவர் அதன்பிறகு அந்த சீரியலின் தொடர்ச்சியாக கலோரியின் கதை சீரியலிலும் நடித்தார். இவர் நடிப்பை பார்த்தபிறகு சரவணன் மீனாட்சி சீரியலிலும் வாய்ப்பு கிடைத்து.
Courtesy: Instagram
சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் அகில என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக புகழ் கதாபாத்திரத்தில் நடித்தது ஷியாம் ஆகும். இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் காட்சிகள் மக்களுக்கு பிடித்து விட்டது.
Courtesy: Instagram
சாய் காயத்ரி அகில கதாபாத்திரத்தில் தந்து தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினர். புகழுக்கும் இவருக்கும் வரும் காட்சிகள், சண்டைகள் என இவர்களுக்கே தனி ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். சாய் காயத்ரி நடிக்கும் நாடகங்களில் தனித்துவமான நடிப்பை கொடுத்து வருகிறார்.
Courtesy: Instagram
இவர் அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் என்ட்ரி கொடுத்தார். விஜே தீபிகா நடித்த கதாபாத்திரத்துக்கு மாற்றாக இவர் நடித்தார். இவரை முதலில் ரசிகர்கள் ஏற்று கொள்ளவில்லை என்றாலும் நடிப்பால் ரசிகர்களை தன பக்கம் இழுத்தார்.
Courtesy: Instagram
ஆனால் கதையில் அவரது கதாபாத்திரத்திற்கு நெகடிவ் காட்சிகள் வருவதால் விலகினார். மேலும் விஜே தீபிகா மீதும் ஐஸ்வர்யாவாக நடிக்க வந்தார். சாய் காயத்ரி நடிப்பு மட்டும் இல்லாமல் நிகழிச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
Courtesy: Instagram
சென்னையில் அடித்து வரும் வெயிலுக்கு இதமான இடத்தை கண்டுபிடித்த சாய் காயத்ரி அங்கிருந்து வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தன் வீட்டில் இருக்கும் பிரிட்ஜ்ல் இருந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டே சுகமாக இருக்கிறது என போஸ்ட் செய்துள்ளார். ரசிகர்களும் சூப்பர் ஐடியா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.